ரஜினிகாந்த் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதியா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என்று இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து வரும் படம் லிங்கா. கே. எஸ். ரவிக்குமார் இயக்கும் இந்த படத்தில் அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா என்று இரண்டு நாயகிகள் உள்ளனர். படத்தின் படபப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
              
இந்நிலையில் சண்டை காட்சிகளை படமாக்கியபோது ரஜினி மயங்கி விழுந்துவிட்டதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று காலை முதல் செய்திகள் வெளியாகின. இதை பார்த்த ரசிகர்கள் ரஜினிக்கு என்ன ஆனதோ என்று நினைத்து கவலை அடைந்தனர்.
இதை அறிந்த கே.எஸ். ரவிக்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
லிங்கா படப்பிடிப்பின்போது ரஜினிக்கு உடல்நலம் சரியில்லை என்று பிரபல தமிழ் செய்தித்தாளில் செய்தி வெளியாகியுள்ளது. அந்த செய்தி உண்மை இல்லை. ரஜினிகாந்த் நலமாக உள்ளார். அவர் சந்தோஷமாக படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

No comments: