தொழில் துவங்கும் வசதி: தமிழகம் முதலிடம்

                     சிறப்பான சலுகைகள், முதலீட்டு கொள்கைகளை கொண்டுள்ளதால், தொழில் துவங்குவதற்கு உகந்த மாநிலங்களாக, தமிழகம், குஜராத் ஆகியவை உள்ளன என, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

எஸ்.டீ.ஆர்.சி., இந்தியா என்ற அமைப்பு, 26 மாநிலங்களில், 3.30 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் குறித்து, ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வறிக்கை விவரம் வருமாறு:தொழில்களை ஊக்குவிக்கும் கொள்கைகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், பல்வேறு பயன்கள் மற்றும் சலுகைகள் ஆகியவற்றிலும், தொழிலை சுலபமாக துவக்குவதிலும், நடத்துவதிலும், பெரும்பான்மையினரின் விருப்பத் தேர்வாக, தமிழகம் உள்ளது. இத்தகைய சிறப்புகளை பெற்ற மாநிலங்களில், குஜராத் இரண்டாவது இடத்தில் உள்ளது. தொழில் வளர்ச்சியில், இம்மாநிலம் மிகச் சிறப்பாக உள்ளது. கடந்த ஆண்டை விட, நடப்பாண்டு வர்த்தகம் சிறப்பாக உள்ளதாக, 58 சதவீதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments