வெகு சுலபமாக தட்கல் ரயில்வே டிக்கெட்டை முன்பதிவு செய்ய மேஜிக் ஆட்டோ ஃபில் என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேஜிக் ஆட்டோ ஃபில் என்ற இந்த பக்கத்தில் பயணிப்போரின் பெயர், வயது போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும். தட்கல் புக்கிங் செய்யும்போது இவ்வாறு நிரப்புவதற்கு நீண்ட நேரம் ஆகிறது. இதனால், தட்கல் டிக்கெட் புக்கிங் செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது.
தட்கல் முன்பதிவின்போது நேரம் விரயமாவதை தவிர்க்கும் வகையில் ஓர் புதிய வசதி அறிமுகமாகியிருக்கிறது. இந்த வசதியில் ஐஆர்சிடிசியின் முன்பதிவு பக்கத்தில் இருப்பது போன்றே பெயர் உள்ளிட்ட விபரங்களையும் முன்னதாகவே நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும்.( இந்த ஆட்டோஃபில் பக்கத்தினை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்).
இதன் பிறகு ஐஆர்சிடிசி வலைத்தளத்தில் எப்போது டிக்கெட் புக் செய்ய வேண்டும் என்றால், புக்மார்க்கில் உள்ள இந்த பக்கத்தினை பூர்த்தி செய்துவிட்டு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஐயம் ஃபீலிங் லக்கி என்ற பட்டனை அழுத்தினால், மேஜிக் ஆட்டோ ஃபில் என்ற பட்டன் உருவாகும்.
இந்த மேஜிக் ஆட்டோ ஃபில் பட்டனை அப்படியே டிராக் செய்து, ஐஆர்சிடிசி முன்பதிவு பக்கத்தில் க்ளிக் செய்தால், பயணியின் விவர பட்டியல் தானாகவே அடுத்த நொடியில் நிரம்பி விடும்.
தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த வசதி வரப்பிரசாதமாக இருக்கும். இந்த வசதியின் மூலம் எளிதாக தட்கல் டிக்கெட்டை புக் செய்யலாம்.
2 Comments