ஸ்டீவ் ஜாப்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் அஸ்டன் கட்சர்!


அஷ்டன் கட்ச்சர் என்ற பிரபல ஹாலிவுட் ஹீரோ ஸ்டீவ் ஜாப்ஸ் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
ஆப்பிள் நிறுவனத்தின் மூலம் பல அரிய படைப்புகளை கொடுத்த மறைந்த முன்னாள் சிஇஓ ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கையை மையமாக கொண்டு தயாராகும் சினிமாவில், அவரது காதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்க இருக்கிறார் ஹாலிவுட் நட்சத்திரமான அஸ்டன் கட்சர்.
இதை இன்டீ மூவி தயாரிக்க இருக்கும் ஜாப்ஸ் என்ற திரைப்படத்தில் அஸ்டன் கட்சர் நடிக்க உள்ளார். எ லாட் டைக் லவ், தி பட்டர்ஃப்லை இஃபக்ட் போன்ற திரைப்படத்தின் மூலம் பலரை கவர்ந்த ஹாலிவுட் நடிகரான அஸ்டன் கட்சர், ஸ்டீவ் ஜாப்ஸ் கதாப்பாத்திரத்தை ஏற்று நடிப்பது ஒரு பெரிய சவால் தான்.
தொழில் நுட்ப உலகில் பெரிய சகாப்தத்தையே உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றவர்களின் காதாப்பாத்திரம், திரைப்படங்களில் பிரதிப்பலிப்பது இவர் இன்னும் உயிர்த்து இருப்பதை தான் உணர்த்துகிறது.

No comments: