உலகின் மிகச்சிறந்த வளர்ப்பு நாய்கள்

மனிதர்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளில் நாய்களுக்கு மிக முக்கிய இடம் உண்டு. வெளிநாடுகளில் நாய்களுக்கு உயில் எழுதிவைத்த சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த அளவிற்கு நாய்களின் மீது பாசம் வைத்துள்ளனர். நம் நாடுகளிலும் நன்றியுள்ள நாய்கள் மனிதர்களுக்கு எண்ணற்ற நன்மைகளை செய்துள்ளன. உலகம் முழுவதும் உள்ள நாய் வகைகளில் வீடுகளிலும், தொழிலுக்காகவும் வளர்க்கப்படும் மிகச்சிறந்த நாய்வகைகளை அறிந்து கொள்வோம்.

ஜெர்மன் ஷெப்பர்டு

ஜெர்மன் ஷெஃபர்டுகள் பல நிறங்களில் காணப்படுகின்றன. பொதுவாக கருப்பு, காய்ந்த பழுப்பு, உள்ளிட்ட நிறங்கள் பிரசித்தி பெற்றவை. உலகின் முதன்மையான காவல், பாதுகாப்பு நாய் என்றால் அது ஜெர்மன் ஷெஃபர்டுதான். அவற்றின் விசுவாசம், காவல்காக்கும் தன்மை போன்றவற்றால் இந்த நாயினம் உலகின் வளர்ப்பினநாய்களில் ஒன்றாக உயர்ந்தது.

ஜெர்மன் ஷெப்ஃபர்டு நாய்கள் முதலில் கால்நடை மந்தையை மேய்த்து செல்வதற்காகவே உருவாக்கப்பட்டது. இதன் கம்பீரமான தோற்றம் நுண்ணறிவு, கட்டளை பயிற்சியின் போது வெளிப்படுத்திய ஆற்றல் போன்றவை காரணமாக அவை காவல் காக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன.

பார்டர் கோலி

பார்டர் கோலி நாய்கள் மிகவும் சுறுசுறுப்பும், புத்திசாலித்தனமும் கொண்டவை. இதன் நுண்ணறிவுத் திறனுக்காக வளர்க்கப்படுகிறது. கட்டளைகளை ஏற்று அதற்கேற்ப செயல்படும் திறம் கொண்டவை

கோல்டன் ரெட்ரீவர் 

கோல்டன் ரெட்ரீவர் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள வளர்ப்பு நாயாகும். எஜமானர்களுக்கு விசுவாசம் மிக்கது. குடும்பத்தில் உள்ள அனைவருடனும் பாசத்துடன் பழகக் கூடியது. 200 வகையான கட்டளைகளை புரிந்து கொள்ளும் தன்மை கொண்டவை. புத்திக்கூர்மையுள்ள இந்த நாய்கள் போட்டிகளில் பங்கேற்று வெற்றி தேடித் தரக்கூடியவை கோல்டன் ரெட்ரீவர். 

டாபர்மேன் பின்ஷர் 

டாபர்மேன் நாய்கள் அச்சம் அறியாதவை, அளவற்ற வலிமை கொண்டவை. அதேசமயம் அழகும், புத்திசாலித்தனமும் கொண்டவை. குடும்பத்தினரும் பாச உணர்வோடு பழகும் தன்மை கொண்டவை.

ஷெட்லாந்த் ஷீப் டாக் 

உலகில் உள்ள புத்திசாலியான நாய்களில் ஒன்று ஷெட்லாந்த் ஷீப்டாக். இவை எஜமானர்களின் குணத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவதில் கெட்டிக்காரத்தனம் கொண்டவை. இந்த வகை நாய்கள் மனிதர்களுடன் பாசமாக பழகக் கூடியவை. 

லேப்ரார்டர் ரெட்டீரிவர் 

அமெரிக்காவிலும், உலக அளவிலும் பெரும்பாலான குடும்பங்களில் இந்த நாய் வளர்க்கப்படுகிறது. இது அன்பான நாய். அனைவரிடமும் நன்றாக பழகும். குழந்தைகளுக்கு பாதுகாப்போடு பாசத்தையும் காட்டும். சுயமாக வேலை செய்யும். மனிதர்களின் நடத்தைகளை அறிந்து அவர்களின் செயல்களுக்கு ஏற்ப பதில் தரும். அவசரகாலத்தில் புத்திச்சாலித்தனத்தோடு செயல்படும்

பாப்பிலான்

உலகிலேயே பாசமான நாய் என்றழைக்கப்படுகிறது பாப்பிலான். இதன் அழகிற்காகவும், பாசத்திற்காகவும் உலகம் முழுவதும் விரும்பப்படுகிறது. காதுகளில் முடி அடர்ந்து பட்டாம்பூச்சியின் இறகுகளைப் போல காணப்படும். சிறிய உருவம்தான் என்றாலும் போட்டிகளில் அசராமல் பங்கேற்கும். புத்திக்கூர்மை கொண்ட இந்த நாய்கள் எஜமானர்களின் சொத்துக்களை பாதுகாப்பதில் கெட்டிக்காரத்தனம் கொண்டவை.

ராட்வீலர்

இந்த நாய்க்கு மோப்ப சக்தி அதிகம், அதனால் போலீஸ், உளவுப்பிரிவு போன்றவற்றில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. காவல் புரிவதிலும், கண்டறிவதிலும் கெட்டிக்காரத்தனம் கொண்டவை.

ஆஸ்திரேலியன் கேட்டில் டாக்

ஆஸ்திரேலியாவின் நாட்டு இனத்தைச் சேர்ந்த நாய் இது. உலகிலேயே புத்திசாலியான நாய் என்று கருதப்படுகிறது. இது விழிப்புணர்வு மிக்கவை. உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பலசாலிகள் இந்த நாய்கள். இதனால் ஆஸ்திரேலியாவில் கால்நடை மேய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. சகிப்புத்தன்மையும், கருணையும், கொண்டவை. கூர்மையான கண்களைக் கொண்ட இந்த நாய்கள் சொத்துக்களை பாதுகாப்பதில் கெட்டிக்காரத்தனம் கொண்டவை.

Post a Comment

0 Comments