கார் திருட்டை தடுக்கும் புதிய சாதனம்

மொபைல்போன் மூலமாக கார் திருட்டை தடுக்கும் புதிய சாதனத்தை கேரள கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய சாதனம் 100 சதவீதம் பாதுகாப்பானது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கார் திருட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க பல நவீன சாதனங்கள் வந்தாலும் அவை எந்தளவுக்கு பாதுகாப்பை வழங்குகின்றன என்பது கூற முடியவில்லை.

இந்த நிலையில், திருவனந்தபுரத்திலுள்ள சித்ரா திருநாள் எஞ்சினியரிங் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் புதிய கார் திருட்டு சாதனத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய சாதனம் 100 சதவீத பாதுகாப்பை தரும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மொபைல்போனுடன் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய சாதனத்தை காரினுள் பொருத்திவிட வேண்டும். உரிமையாளரின் அனுமதி இல்லாமல் அன்னிய நபர்கள் காருக்குள் நுழைய முயன்றால் உடனடியாக உரிமையாளருக்கு அழைப்பு வரும்.

தெரிந்தவர்கள்தான் காரை திறக்கின்றனர் என உரிமையாளருக்கு தெரிந்தால் விட்டுவிடலாம். அப்படி இல்லாமல் புதிய நபர்கள் காரை திறக்கின்றனர் என்று தெரிந்தால், காருக்குள் பொருத்தப்பட்டிருக்கும் சாதனத்துக்கு அதே மொபைல்போனிலிருந்து ஒரு அழைப்பு செய்தால் போதும்.

இந்த சாதனம் உடனடியாக இயங்கி கார் எஞ்சினை ஆப் செய்து விடும். மீண்டும் உரிமையாளர் வந்து ரகசிய எண்ணை பதிவு செய்தால் மட்டுமே கார் எஞ்சினை ஸ்டார்ட் செய்ய முடியும். உலகின் எந்த மூலையில் மொபைல்போன் தொடர்பில் இருந்தாலும் காரின் பாதுகாப்பை இதன் மூலம் உறுதிப்படுத்த முடியும் என்கின்றனர்

இந்த கருவி 100 சதவீதம் பாதுகாப்பானது என்று இதை உருவாக்கிய மாணவர்கள் தெரிவி்த்தனர். மேலும், ரூ.2000 விலையில் விற்பனை செய்ய முடியும் என்றும் அவர்கள் கூறினர்.

Post a Comment

0 Comments