சூரியன் மீது வெள்ளி கிரகம்: ஜூன் 6​ந் தேதி

 சூரியக் குடும்பத்தில் சூரியனில் இருந்து இரண்டாவதாக அமைந்துள்ள கிரகம் வெள்ளி. மிக்கும் சூரியனுக்கும் இடையில் இந்த கிரகம் சுழன்று வருகிறது.  மி உள்பட எல்லா கிரகங்களும் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சுழல்கின்றன. இதனால் சூரியன் கிழக்கு திசையில் உதித்து மேற்கில் மறைகிறது. ஆனால் வெள்ளி கிரகம் மட்டும் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி சூழல்கின்றது. இதனால் வெள்ளி கிரகத்தில் மட்டும் சூரியன் மேற்கு திசையில் உதிக்கும். இத்தகைய சிறப்புடைய வெள்ளி கிரகம் சூரியன் உதிக்கும் சமயத்திலும், சூரியன் மறையும் சமயத்திலும் அதிகபட்சத்தின் வெளிச்சத்தைக்காட்டி மிளிரும். இரவு நேரத்தில் சந்திரனுக்கு அடுத்தப்படியாக நட்சத்திரங்களிலேயே வெள்ளிதான் அதிக ஒளியுடன் திகழும்.   வெள்ளி கிரகத்தின் நகர்தலை வைத்து அதை அழைக்கிறார்கள். சூரியனின் இடதுபுறம் வெள்ளி இருக்கும்போது, வானத்தில் அது மேற்கு திசையில் காட்சி அளிக்கும். அப்போது அதை அந்தி வெள்ளி என்பார்கள். சூரியனின் வலதுபுறத்துக்கு வெள்ளி வரும்போது அதிகாலை நேரமாகும். அந்த வெள்ளி விடிவெள்ளி என்றழைக்கப்படுகிறது. 


             கிராமங்களில் இதை காலை நட்சத்திரம், மாலை நட்சத்திரம் என்று சொல்வார்கள்.   அந்த வெள்ளி காலத்தில்  சுக்கிரனுக்கு எதிராக கிரகப்பிரேவசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்ற நம்பிக்கையும் கிராமங்களில் உள்ளது.  சூரியனை ஒருதடவை சுற்ற 144 நாட்களை வெள்ளி கிரகம் எடுத்துக் கொள்ளும். பொதுவாக பகல் நேரங்களில் அது பளிச் என தெரியாது. ஆனால் வரும் ஜூன் மாதம் 6-ந்தேதி வெள்ளிக்கிரகம் மிக அர்வமான ஒரு நிலையில் காட்சியளிக்க உள்ளது. சூரியன் மீது வெள்ளி கிரகம் கருப்புப் பொட்டு போல தோன்றும். வெள்ளியின் சுழற்சி பாதையில் இத்தகைய நிகழ்வு மிக, மிக அரிதாகவே ஏற்படும். சூரியன் மீது கருப்புப் பொட்டுபோல தோன்றும் வெள்ளி, சிறிது நேரத்துக்குப் பிறகு மெல்ல, மெல்ல விலகும். இந்த அரிய, அர்வக் காட்சியை சென்னை மக்கள் 6​ந்தேதி காலை நன்கு கண்டு ரசிக்கலாம். சென்னையிலுள்ள பிளானிடோரியத்தில் இ தைக் காணலாம்.  சூரியன் மீது வெள்ளிகிரகம் கருப்பு பொட்டுபோல தோன்றும் நிகழ்ச்சி இனி 105 ஆண்டுகளுக்கு பிறகே நிகழ உள்ளது. ஆகையால் இப்போதைய தலைமுறையினர் இனி இதைக்கண்டு காண்பது அரிதாகும்.

No comments: