இலங்கையை வென்றது இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது.
வங்கதேசத்தில் உள்ள மிர்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்தியா 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து விளையாடிய இலங்கை 45.1 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்தது.
ஏமாற்றிய சச்சின்: இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சச்சின், கம்பீர் களம் கண்டனர். மிகவும் பொறுமையாக விளையாடிய சச்சின் 19 பந்துகளில் 6 ரன்கள் எடுத்திருந்தபோது லக்மல் வீசிய "புல் டாஸ்' பந்தில் கேட்ச் கொடுத்தார். எனினும், அது "நோ-பால்' என சச்சின் சந்தேகம் எழுப்பினார். "டி.வி. ரீப்ளே'வில் அது "நோ பால்' அல்ல எனத் தெரிந்தவுடன் 3-வது நடுவர் அவுட் என அறிவித்தார்.
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த கம்பீர், கோலி அதிரடியாக விளையாடாவிட்டாலும், விரைவான ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
17-வது ஓவரில் கம்பீர் 36 ரன்கள் எடுத்திருந்தபோது பிரசன்னா வீச்சில் கொடுத்த கேட்சை சன்டிமால் நழுவவிட்டார்.
10-வது சதம்: இருவரும் இணைந்து 123 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்தனர். அதன் பின்னரும் இருவரும் சிறப்பாக விளையாடினர்.கோலி 115 பந்துகளிலும், கம்பீர் 116 பந்துகளிலும் தங்கள் சதத்தைப் பூர்த்தி செய்தனர். இருவருக்குமே ஒரு தின ஆட்டங்களில் இது 10-வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக விளையாடிவந்த கம்பீர் 118 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் எடுத்திருந்தபோது மஹரூப் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்.


அதற்கடுத்த 2-வது பந்தில் கோலி ஆட்டமிழந்தார். கோலி 120 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 108 ரன்கள் எடுத்தார். இருவரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 37 ஓவர்களில் 205 ரன்கள் சேர்த்தனர்.
தோனி அதிரடி: அதன் பின்னர், தோனி, ரெய்னா இணை அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டது. தோனி 26 பந்துகளில் ஆட்டமிழக்காமல் ஒரு சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 46 ரன்களும், ரெய்னா 17 பந்துகளில் ஆட்டமிழக்காமல் ஒரு சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 30 ரன்களும் எடுத்தனர்.
இருவரும் இணைந்து 43 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்தனர். கடைசி 100 ரன்களை இந்திய வீரர்கள் 67 பந்துகளில் விளாசினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயவர்த்தனே, சங்ககாரா அபாரம்: 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது.
தில்ஷான் விரைவிலேயே பெவிலியன் திரும்பினாலும், அனுபவ வீரர்கள் ஜெயவர்த்தனே, சங்ககாரா அபாரமாக விளையாடினர். அதிரடியாக விளையாடிய ஜெயவர்த்தனே 59 பந்துகளில் 2 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சங்ககாரா 87 பந்துகளில் ஒரு சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்தார். அதன் பின்னர் களமிறங்கியவர்களில் திரிமானி மட்டுமே 29 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இந்திய அணியின் இர்பான் பதான் 4 விக்கெட்டுகளும், வினய் குமார், அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் அடுத்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானும், இலங்கையும் வியாழக்கிழமை விளையாடுகின்றன.
ஸ்கோர் போர்டு
இந்தியா
கம்பீர் (சி) தரங்கா (பி) மஹரூப் 100 (118)
சச்சின் (சி) ஜெயவர்த்தனே (பி) லக்மல் 6 (19)
கோலி (சி) திரிமானி (பி) மஹரூப் 108 (120)
தோனி நாட் அவுட் 46 (26)
ரெய்னா நாட் அவுட் 30 (17)
உதிரி 14
மொத்தம் (50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு) 304
விக்கெட் வீழ்ச்சி: 1-19 (சச்சின்), 2-224 (கம்பீர்), 3-226 (கோலி)
பந்துவீச்சு
குலசேகரா 10-0-67-0
லக்மல் 10-1-67-1
தில்ஷான் 10-0-54-0
பிரசன்னா 9-0-45-0
மஹரூப் 10-0-57-2
கபுகெடேரா 1-0-7-0
இலங்கை
ஜெயவர்த்தனே (சி) தோனி (பி) பதான் 78 (59)
தில்ஷான் (சி) கோலி (பி) பதான் 7 (9)
சங்ககாரா (சி) ஜடேஜா (பி) அஸ்வின் 65 (87)
சன்டிமால் (பி) அஸ்வின் 13 (22)
திரிமானி எல்பிடபிள்யூ (பி) அஸ்வின் 29 (37)
குலசேகரா (பி) வினய் குமார் 11 (9)
தரங்கா (பி) பதான் 17 (16)
கபுகெடேரா (சி) கோலி (பி) வினய் 0 (1)
மஹரூப் (சி) ரெய்னா (பி) வினய் 18 (19)
பிரசன்னா (சி) சச்சின் (பி) பதான் 8 (12)
லக்மல் நாட் அவுட் 0 (0)
உதிரி 8
மொத்தம் (45.1 ஓவர்களில் அனைத்து விக். இழப்புக்கு) 254
விக்கெட் வீழ்ச்சி: 1-31 (தில்ஷான்), 2-124 (ஜெயவர்த்தனே), 3-152 (சன்டிமால்), 4-196 (சங்ககாரா), 5-198 (திரிமானி), 6-216 (குலசேகரா), 7-216 (கபுகெடேரா), 8-241 (தரங்கா), 9-254 (மஹரூப்), 10-254 (பிரசன்னா).
பந்துவீச்சு
பதான் 8.1-1-32-4
பிரவீண் 7-0-47-0
வினய் குமார் 9-0-55-3
ஜடேஜா 4-0-31-0
ரெய்னா 5-0-34-0
அஸ்வின் 9-0-39-3
ரோஹித் 3-0-14-0
கோலி
ரன் 108
பந்து 120
பவுண்டரி 7

கம்பீர்
ரன் 100
பந்து 118
பவுண்டரி 7

No comments: