60 புதிய அப்ளிகேஷன்களை வெளியிடும் ஃபேஸ்புக்!


உலகெங்கிலும் வெற்றிகரமாக உலா வந்து கொண்டிருக்கும் ஃபேஸ்புக் பற்றி ஓர் ஆச்சர்ய மூட்டும் தகவல் இங்கே.  ஃபேஸ்புக்கின் டைம்லைன் ப்ரோஃபைலில் 60 புதிய அப்ளிக்கேஷன்களை வழங்கி அசத்த உள்ளது ஃபேஸ்புக். இது சற்று மூச்சு திணற வைக்கும் விஷயம் தான்.
அப்படி அந்த 60 அப்ளிக்கேஷன்களில் என்ன புதுமை என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பவர்களுக்கு புதிய அப்ளிக்கேஷன்கள் பற்றிய சில தகவல்கள். ஆட்டோடிரேடர் என்ற இந்த அப்ளிக்கேஷன் மூலம் கார் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம். கலை நுட்ப வேலைபாடுகளை பகிர்ந்து கொள்ள இதில் ஆர்ட்ஃபைன்டர் என்ற அப்ளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ட்ஃபைன்டர் ஆப்ஸ் மூலம் கேலரீஸில் இருந்து விரும்பிய புகைப்படங்களை அப்லோட் செய்யலாம். இது போல் சவுன்டுக்ளவுடு, ஃபுட்ஸ்பாட்டிங், ஃபூட்ளி, டிக்கெட்மாஸ்டர், பின்ட்ரெஸ்டு, ரோட்டன், டொமேட்டோஸ், போஸ், கோபோ, கோகோபாட், ட்ரிப் அட்வைசர் என்று வித்தியாசமான 60 புதிய அப்ளிக்கேஷன் வசதிகளை, டைம்லைன் பக்கத்திற்காக உருவாக்கி இருக்கிறது ஃபேஸ்புக்.
டிஸைன், ஷாப்பிங், ஃபேஷன் போன்றவைகளை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்புபவர்கள் பின்ட்ரெஸ்டு அல்லது போஸ் அப்ளிக்கேஷனையும், சமையல் பற்றிய செய்திகளை பரிமாறிக்கொள்ள ஃபூட்ளி ஆப்ஸையும் தேர்வு செய்து கொள்ளலாம். கோகோபாட் மற்றும் ட்ரிப் அட்வைஸர் அப்ளிக்கேஷன் மூலம் விருப்பமான இடம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம். இப்படி பல அரிய வகை அப்ளிக்கேஷன்களை டைம்லைன் பக்கத்திற்காக உருவாக்கி உள்ளது ஃபேஸ்புக்.

https://www.facebook.com/about/timeline/apps

Post a Comment

0 Comments