விஜய் படத்தில் மளையாள நடிகர்! ரகசியம்

  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படம் துப்பாக்கி. படத்தில் விஜய்யின் உழைப்பை பற்றி தன் நட்பு வட்டாரத்தில் புகழ்ந்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். 



இந்நிலையில் படத்தில் நடிக்கும் ஒரு கதாபாத்திரத்தை பற்றி வெளியே சொல்லாமல் ரகசியமாக வைத்துள்ளார்களாம். விஜய்யுடன் மலையாள நடிகர் ஜெயராம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதே அந்த ரகசியமாம். முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமாவதை அடுத்து படத்தில் ஜெயராம் நடிக்கும் விஷயத்தை இப்போதைக்கு வெளியே சொன்னால், பிரச்சினை கிளம்பிவிடுமோ என்று பதறிப்போய் உள்ளார்களாம் படத்தின் இயக்குனரும் நடிகரும்.
முல்லைப் பெரியாறு பிரச்சினையின் சூடு தனிந்ததும் விஷயத்தை வெளியே சொல்லலாம் என்று திட்டமிட்டுள்ளார்களாம். 

அப்படிப் பார்த்தால் இப்போது வெளிவர இருக்கும் பல தமிழ் படங்களில் மலையாள சேச்சிகளே ஹீரோயின்களாக இருக்கிறார்கள். அதைப் பற்றி சினிமா ரசிகர்கள் உட்பட யாருமே கவலைப்படவில்லை. நடிகருக்கு ஒரு நியாயம் நடிகைகளுக்கு ஒரு நியாயமா? என்ற கேள்வியே எழுகிறது.

அதே சமயத்தில் தன் படத்தில் நடிக்கும் இரண்டு மலையாள நடிகைகளையும் போயிட்டு வாங்க, பிரச்சனை முடிந்ததும் பார்த்துக்கொள்ளளாம் என்று வீட்டுக்கு அனுப்பிவைத்த இயக்குனர் பாரதிராஜா போன்ற உணர்வுப்பூர்வமான இயக்குனர்களும் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம். 

Post a Comment

0 Comments