ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை துவங்க உள்ள நிலையில் சச்சின் டெண்டுல்கரின் 100வது சதம் பற்றி முன்னணி நாளிதழ்கள் ஆர்வத்தோடு செய்தி வெளியிட்டுள்ளன. | |
. | |
சச்சின் டெண்டுல்கர் சர்வதேச போட்டிகளில் 99 சதங்களை அடித்துள்ளார். அவர் 100வது சதத்தை எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மெல்பர்னில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் சச்சின் முதல் இன்னிங்சில் 73 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்நிலையில் 2வது டெஸ்ட் நாளை சிட்னியில் தொடங்குகிறது. சிட்னி போட்டியில் சச்சின் 100வது சதத்தை அடிப்பார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருக்கிறது. இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய ரசிகர்களும் இதனை விரும்புகின்றனர். இந்தியாவுக்கு வெளியே உள்ள மைதானங்களில் சிட்னி மைதானமே தனக்கு மிகவும் விருப்பமானது என்று சச்சின் கூறியிருந்தார். சிட்னி மைதானத்தில் அவர் 2 சதம் மற்றும் ஒரு இரட்டை சதத்தை அடித்துள்ளார். எனவே, சிட்னி டெஸ்ட் போட்டியில் சச்சின் 100வது சதத்தை அடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. சிட்னியில் இருந்து வெளியாகும் நாளிதழ்களும் இதுபற்றி பரபரப்பாக செய்தி வெளியிட்டு வருகின்றன. முன்னாள் வீரர், சுனில் கவாஸ்கர், லாரா உள்ளிட்ட வீரர்கள் சச்சின் பற்றி தெரிவித்துள்ள கருத்துக்களையும் நாளிதழ்கள் வெளியிட்டு வருகின்றன. நாளை துவங்கும் டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெறும் 100வது டெஸ்ட் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்க அம்சவமாகும். எனவே, ஆஸ்திரேலிய மீடியா முழுகூதும் சச்சின் மயமாக காட்சியளிக்கிறது. ******************************************************* |
சர்வதேச கிரிக்கெட் உலகின் நேர்மையான கிரிக்கெட் வீரர் விருதை, இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி வென்றுள்ளார். கடந்த இங்கிலாந்து தொடரின் போது, ஆட்டமிழந்த இங்கிõந்து வீரர் இயான் பெல்லை, தோனி மீண்டும் ஆட அழைத்ததால் இவ்விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 13ம் தேதி, இவ்விருது வழங்கும் விழா ஆஸ்திரியாவில் நடைபெற உள்ளது. தோனி, தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் பங்கேற்றுள்ளதால், அவருக்கு இவ்விருது, சிட்னியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வழங்கப்பட்டது.
**********************************
0 Comments