பிரதமர் வீட்டில் சிறப்பு விருந்தினராக தனுஷ்.

by 1:47 PM 0 comments
கொலவெறி' பாடல் தனுஷை ஊர் ஊராக சுற்ற வைக்கிறது. கொல்கத்தா, டெல்லி என பறந்து கொண்டிருக்கிறார்.

கொல்கத்தாவில் நோக்கியா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்தினார்.

அங்கு பேசும்போது, " எந்த மொழிப்பாடலாக இருந்தாலும் நான் பாடத் தயாராக இருக்கிறேன். கொலவெறி பாடல் இவ்வளவு பிரபலமானதற்கு மூன்று முக்கிய காரணங்கள் இருப்பதாக நினைக்கிறேன். 1. அப்பாடலில் உள்ள ஆங்கில வரிகள். 2. அப்பாடலில் இருக்கும் மெல்லிய நகைச்சுவை. 3. அதன் வரிகள் எங்கேயிருக்கும் இளைஞர்களுக்கும் பொதுவானதாக இருக்கிறது.! " என்றார்.

டில்லியில் பிரதமர் வீட்டில் நடக்கும் விருந்தில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார் தனுஷ்.

ரத்தன் டாடா, அமிதாப் பச்சன் என பிரபலங்கள் தனுஷை தங்கள் வீட்டில் விருந்துக்கு அழைக்க வைத்திருக்கிறது 'கொலவெறி'.

இந்திய அளவில் தேசிய விருது, உலக அளவில் 'கொலவெறி' பாடல் என 2011 தனுஷின் ஆண்டாக இருக்கிறது.

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

0 comments: