கொலைமிரட்டல்: நடிகர் சித்தார்த் மீது புகார்

தமிழில் பாய்ஸ், ஆயுத எழுத்து போன்ற படங்களில் நடித்தவர் சித்தார்த். தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார்.சித்தார்த் மீது மதுரவாயல் லட்சுமி நகரை சேர்ந்த பாலு போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். மனுவில் கூறி இருப்பதாவது:-
நான் வீடுகளுக்கு உள் அலங்காரம் செய்து வருகிறேன். ராஜாஅண்ணாமலைபுரம் சேமியர்கள் சாலையில் வசிக்கும் நடிகர் சித்தார்த்தும், அவரது தந்தை சூரிய நாராயணனும் என்னை அணுகி அவர்கள் வீட்டுக்கு உள்அலங்காரம் செய்யும்படி கேட்டனர். அதற்கு ரூ.6 லட்சத்து 63 ஆயிரம் செலவாகும் என திட்ட மதிப்பீடு கொடுத்தேன். அவர்கள் சம்மதித்தனர்.
நானும் அவர்கள் வீட்டில் உள் அலங்கார பணியை செய்து முடித்தேன். ஆனால் பேசிய படி பணம் தரவில்லை. மொத்தம் ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் மட்டுமே தந்துள்ளனர். மீதி ரூ.2 லட்சத்து 37 ஆயிரத்தை தரவில்லை. பல தடவை அவர்களிடம் கேட்டு விட்டேன் தரவில்லை.
கடந்த 13-ந் தேதி மீண்டும் அவர்கள் வீட்டுக்கு போய் பணம் கேட்டேன். அப்போது சித்தார்த்தும், சூரியநாராயணனும் பணம் தர முடியாது என்று சொல்லி எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் பணத்தை வாங்கிக் தரும்படி கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.
 இந்த புகார் மீது விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

3 comments:

இணையத்தில் நீங்களும் சம்பாரிக்கலாம் said...

முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html