பாகிஸ்தான் பிரதமர் நாற்காலி உடைந்தது

 பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானியின் வெயிட் தாங்காமல் அவர் அமர்திருந்த நாற்காலி உடைந்தது. இதைப் பார்த்த ஒருவர் நாற்காலி உடைந்தது கெட்ட சகுனம் என்றார்.

பாகிஸ்தானில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜியில் நடந்த நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் யூசுப் ராசா கிலானி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது கிலானியின் எடை தாங்காமல் அவர் உட்கார்ந்திருந்த நாற்காலி திடீர் என்று உடைந்தது. இதனால் நிலைகுலைந்த கிலானி கீழே விழுந்துவிடாமல் அவரது பாதுகாவலர்கள் ஓடிவந்து பிடித்தனர். இதனால், கிலானிக்கு ஒரே அவமானமாகப் போய்விட்டது.

பின்னர் அவருக்கு வேறு நாற்காலி கொடுக்கப்பட்டது. அதில் பார்த்து உட்கார்ந்தார் பாக். பிரதமர். அடடா நாற்காலி உடைந்துவிட்டதே. இது கெட்ட சகுனம் அல்லவா என்று அங்கிருந்த ஒருவர் தெரிவித்துள்ளார். நாற்காலி உறுதியாக இல்லாததால் தான் உடைந்தவிட்டது என்று இன்னொருவர் தெரிவித்துள்ளார்.

No comments: