779 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கு கழிவறை

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, சமுதாயத்தில் நலிவுற்ற நிலையில் வாழும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை  உயர்த்த கல்வி உதவிகள், வேலை வாய்ப்பு வசதிகள்,  பொருளாதார உதவிகள் போன்ற வாழ்வாதாரத் தேவைகளை பூர்த்தி செய்யும் உன்னதமான திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.   
ஆதிதிராவிடர்  மாணவ, மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்காக, இலவச மிதிவண்டி வழங்குதல், விடுதிகளில் தங்கும் மாணவ மாணவியரின் உணவு மற்றும் சிறு செலவினங்களுக்கான உதவித் தொகைகளை உயர்த்துதல், இடைநிற்றல் இன்றி மாணவ மாணவியர் படிக்க ஏதுவாக,   விடுதிகளில் தங்குவோரின் எண்ணிக்கையை அதிகரித்தல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியரின் பள்ளிகளுக்கு  உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய கட்டடங்கள் கட்டுதல், விடுதிகளுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
அந்த வகையில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 1,369 பள்ளிகளில் 779 பள்ளிகளில் கழிவறை கூடங்கள் இல்லாதிருப்பதை அறிந்த  ஜெயலலிதா அவர்கள் இந்த 779 பள்ளிகளிலும்  உடனடியாக கழிவறைக் கூடங்கள் அமைக்க உத்தரவிட்டுள்ளார்கள்.  
இதன்படி, சென்னையில் உள்ள 8 பள்ளிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  58 பள்ளிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 24 பள்ளிகளிலும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 68 பள்ளிகளிலும், கடலூர் மாவட்டத்தில் உள்ள 88 பள்ளிகளிலும், வேலூர் மாவட்டத்தில் உள்ள 61 பள்ளிகளிலும்,   திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள  43 பள்ளிகளிலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 30 பள்ளிகளிலும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 பள்ளிகளிலும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 7 பள்ளிகளிலும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 7 பள்ளிகளிலும், சேலம் மாவட்டத்தில் உள்ள 58 பள்ளிகளிலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 11 பள்ளிகளிலும், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 12 பள்ளிகளிலும், திருச்சி மாவட்டத்தில் உள்ள  28 பள்ளிகளிலும், கரூர் மாவட்டத்தில் உள்ள 14 பள்ளிகளிலும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள 6 பள்ளிகளிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 6 பள்ளிகளிலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 83 பள்ளிகளிலும், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  13 பள்ளிகளிலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 47 பள்ளிகளிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 11 பள்ளிகளிலும், மதுரை மாவட்டத்தில் உள்ள 16 பள்ளிகளிலும், தேனி மாவட்டத்தில் உள்ள 7 பள்ளிகளிலும்,  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 12 பள்ளிகளிலும்,   ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 7 பள்ளிகளிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள  17 பள்ளிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 பள்ளிகளிலும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 12 பள்ளிகளிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 3 பள்ளிகளிலும்,  என மொத்தம் 779 பள்ளிகளில் கழிவறைக் கூடங்கள் கட்ட, பள்ளி ஒன்றுக்கு 5 லட்சம் ரூபாய் வீதம் 38 கோடியே 95 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
      இந்த நடவடிக்கையின் மூலம் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் ஆரோக்கியமான சூழ்நிலையில் கல்வி பயிலும் நிலை உருவாகும்.

Post a Comment

0 Comments