பிரதமர் மன்மோகன் சிங்கின் சொத்து விபரம்

பிரதமர் மன்மோகன் சிங்கின் சொத்து விவரத்தை வெளியிட்டுள்ளது பிரதமர் அலுவலகம். அவருடைய மொத்த சொத்து மதிப்பு 4.8 கோடி ரூபாய்.தெற்கு டெல்லியில் வசந்த் கஞ்ச் பகுதியில் ஒரு பிளாட்டும், சண்டிகரில் ஒரு வீடும் அவருக்கு சொந்தமாக உள்ளன.
மேலும் அவருக்குச் சொந்தமாக மாருதி 800 (1996 மாடல்) கார் ஒன்று உள்ளது. அவருக்குச் சொந்தமாக நிலம் எதுவும் இல்லை என்றும், 150 கிராம் அளவுக்கு தங்க நகைகள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுபோல் மற்ற அமைச்சர்களின் சொத்து விவரங்களும் வெளியிட்டப்பட்டுள்ளன. அதில், ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணிக்கு மிகவும் குறைவான சொத்துகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ரூ 15 லட்சம் மதிப்புள்ள விவசாய நிலம், வங்கிக் கணக்குகளில் ரூ 1.82 லட்சம் சேமிப்பு, ஒரு செகன்ட் ஹாண்ட் மாருதி வாகன் ஆர் கார் உள்ளன. வங்கியில் ரூ 1.32 லட்சம் கடன் உள்ளது. இந்த http://pmindia.nic.in விவரங்கள் பிரதமரின் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும் சில தகவல்கள் முழுமையாக இல்லை.

No comments: