நடந்து செல்பவர்களை கவனிக்காத சென்னை

இந்தியாவில் பாதசாரிகளுக்கான நடைபாதை வசதிகள் சென்னையில்தான் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.நாட்டின் முக்கிய நகரங்கள் வேறு ஆறோடு ஒப்பிடுகையில் சென்னை கடைசியா வந்திருப்பதாக ஆய்வு கூறுகிறது.
ஆசிய நகரங்களில் தூய்மையான காற்றுக்கான முன்னெடுப்பு (சிஏஐ - ஆசியா) என்ற அமைப்பு இந்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. புனே, ராஜ்கோட், புவனேஸ்வரம், இந்தூர், சூரத் மற்றும் சென்னை ஆகிய 6 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கள ஆய்வு, பாதசாரிகளின் நேரடிக் கருத்து மற்றும் அரசின் போக்குவரத்து மற்றும் நகர்வுக் கொள்கை ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், பாதசாரிகளுக்கான வசதிகளைச் செய்து கொடுப்பதில் 100-க்கு 54 மதிப்பெண்கள் பெற்று, புனே நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 40 மதிப்பெண்களை மட்டும் பெற்று சென்னை நகரம் கடைசி இடத்தில் உள்ளது.அதாவது மற்ற நகரங்களை விட பாதசாரிகளுக்கு இங்குதான் வசதிகள் மிகவும் குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் பாதசாரிகளுக்கான வசதிகளைப் பொருத்தவரை 6 நகரங்களிலுமே மோசமான நிலைதான் காணப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.குடியிருப்பு மற்றும் வர்த்தகப் பகுதிகளில் வசதி செய்து தருவதில், புவனேஸ்வரம் மற்றும் புனே நகரங்கள் முன்னிலையில் உள்ளன.பிற ஆசிய நகரங்களுடன் ஒப்பிடும்போது, இந்திய நகரங்கள் மிகவும் பின்தங்கியுள்ளன.சாலைகளில் பாதுகாப்பு வசதிகள், உடல் ஊனமுற்றவர்களுக்கான நடைபாதை வசதிகள், சாலையைக் கடக்கும் வசதிகள் ஆகியவற்றில் போதிய கவனம் செலுத்தப்படுவதில்லை என்று ஆய்வு கூறுகிறது.

Post a Comment

1 Comments

நடந்து செல்பவர்களை எப்படி கவனிக்கும்... காரில் செல்பவர்களையும் விமானத்தில் செல்பவர்களையும் கவனிப்பதற்காகத்தானே மேம்பாட்டு பணிகளுக்காக கோடிக்கணக்க்கில் வாரி இறைக்கிறது அரசாங்கம்... எப்படி முன்னிலையில் இருக்கும் நம் நாடு... கருப்பு பணம் வைத்திருப்பதில் வேண்டுமானால் இருக்கலாம்... நல்ல ஆதங்க பகிர்வு நண்பா