அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை

கரூரை அடுத்த காந்தி கிராமம் பகுதிகளில் நன்றி சொல்ல சென்ற அமைச்சர் செந்தில் பாலாஜியிடம்
, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைளை வைத்து திக்குமுக்காட வைத்தனர். தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நேற்று காலை தாந்தோணி நகராட்சிக்கு உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு நடந்து சென்று நன்றி தெரிவித்தார். பின்னர், காந்தி கிராமத்தில் உள்ள சக்தி விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற அமைச்சர் செந்தில் பாலாஜி, அங்கிருந்த பக்தர்களிடம் நன்றி தெரிவித்தார். அப்போது காந்தி கிராம வீட்டு வசதி நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், " காந்தி கிராமத்தில் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான 95 ஏக்கர் நிலம் இடம் உள்ளது. அங்கு விளையாட்டு மைதானம் அமைத்தால், மாவட்டத்தில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் வசதியாக இருக்கும். மேலும் காந்தி கிராம வீட்டு வசதி குடியிருப்பில் பல ஆண்டுகளாக ரோடுகள் போடவில்லை. குண்டும், குழியுமான சாலைகளில் மழை காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே புதியதாக ரோடுகள் போட வேண்டும்' என கோரிக்கை வைத்தனர். அடுக்கடுக்கான கோரிக்கைககள் வந்ததால் திகைத்து போன அமைச்சர் செந்தில் பாலாஜி, விரைவில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் பேசி கோரிக்கைகளை முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியோடு விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments