கரூரில் சினிமா தியேட்டர்கள் மக்களிடம் கொள்ளை


கரூரில் உள்ள பெரும்பாலான சினிமா தியேட்டர்களில் அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கால் தமிழக அரசின் விதிமுறைகளுக்கு மாறாக பல மடங்கு அதிகமாக நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுகாதரமற்ற சில தியேட்டர்களால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் புதிய படங்கள் திரையிடப்படும் போது, கள்ள மார்கெட்டில் புரோக்கர்கள் மூலம் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்வதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார் எழுந்தது. குறிப்பாக, முன்னணி நடிகர்களின் வெளியாகும் ஒரு டிக்கெட்டின் விலை 500 ரூபாய் வரை கூட கள்ள மார்கெட்டில் விற்கப்பட்டது.திண்பண்டங்களின் விலையும் "ஜெட்' வேகத்தில் உயர்த்த ப்பட்டது. இதனால் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் சினி மா தியேட்டர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், "சினிமா தியேட்டர்களில் நுழைவு கட்டணத்தை குறைத்து வரைமுறைப்படுத்த வேண்டும்' என கோரிக்கை எழுந்தது.
கடந்த தி.மு.க., ஆட்சியில், ஐந்து அடிப்படை வசதி கொண் ட தியேட்டர் மற்றும் ஏழு அடி ப்படை வசதி கொண்ட மல்டி ஃபிளக்ஸ் தியேட்டர்களுக்கு ஒரு கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி, குறைந்தப்பட்ச கட்டணம் 10 ரூபாயும், அதிப்பட்சமாக 100 ரூபாய் வரையிலும் நிர்ணயம் செய்யப்பட்டது. புதியதாக படம் வெளிவரும் போது முதல் 15 நாட்களுக்கு மட்டும் அதிகப்படியான கட்டணம் வசூலித்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அந்த 15 நாட்களிலும் குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயகத்தான் இருக்க வேண்டும்' என தமிழக அரசு உத்தரவிட்டது.

ஆனால், கரூரில் உள்ள எந்த சினிமா தியேட்டர்களிலும் குø றந்தப்பட்ச டிக்கெட்டை 10 ரூப õய்க்கு கொடுப்பது இல்லை. கரூர் மாவட்டத்தில் மல்டி பிள க்ஸ் தரத்திற்கு தியேட்டர்கள் இ ல்லை. இதனால் அதிகப்பட்சமாக 70 ரூபாய் வரைதான் டிக்கெட்களை விற்பனை செய்ய வேண்டும். ஆனால், புதிய பட ங்கள் வெளியாகும் போது 150 ரூபாய் வரை டிக்கெட் விற்பø ன செய்யப்படுகிறது. புதிய பட ங்கள் வெளியாகி, 15 நாளுக்கு பிறகு, டிக்கெட் விலையை குø றக்க வேண்டும்' என தமிழக அரசு தெளிவாக கூறியுள்ளது.

ஆனால், கரூரில் பெரும்பாலான தியேட்டர்களில் புதிய பட ங்கள் வெளியாகி ஒரு மாதம் கா லம் ஆகியும், டிக்கெட் விø லயை குறைப்பது இல்லை. சில சினிமா தியேட்டர்களில் முறையான நுழைவு கட்டணத்துடன் கூடிய டிக்கெட் வழங்கப்படுவ து இல்லை. எந்த தகவல்களும் இல்லாத வெறும் கூப்பன்தான் மக்களுக்கு வழங்கப்படுகிறது.
கரூரில் உள்ள சில சினிமா தியேட்டர்களில் சுகாதாரம் என்றால் என்ன விலை? என்று கேட்கும் அளவுக்குதான் உள்ளது. குப்பை, கொசு மற்றும் மூட்டை பூச்சி தொல்லையால் தியேட்டர்களுக்கு செல்லும் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
கழிப்பிடமும் மிக மோசமாக உள்ளதால், தியேட்டர்களில் அம ர்ந்து திருப்தியாக படம் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் வைத்தால், குளிர்பானம் விற்பனையாகாது என்பதால், பெரும்பாலான தியேட்டர்களில் குடிநீர் கூட வைப்பது இல்லை.பணம் கொடுத்து நோயை வாங்கும் நிலையில் கரூரில் சினிமா தியேட்டர்கள் நிலை உள்ளது. கரூர் நகரப்பகுதிகளை விட கிராமப்பகுதிகளில் உள்ள சினிமா தியேட்டர்களில் அடிப்படை வசதி என்பது சுத்தமாக கிடையாது. ஆனால், "பலத்த கவனிப்பால்' மாமூலாக எதை பற்றியும் கண்டு கொள்ளாமல் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகள் மவுனமாக உள்ளனர்.


மக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட சினிமா தியேட்டர்களில் அரசு அதிகாரிகள் முழுமையாக சோதனை நடத்த வேண்டும். அரசு அறிவித்துள்ள கட்டணம் முறையாக வசூலிக்கப்படுகிறதா என்பதையும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்."விதிமுறை மீறும் சினிமா தியேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்' என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

2 Comments

அதனால தான் மக்கள் தியேட்டருக்கு வர யோசிக்கின்றனர்.... நன்றி
calmmen said…
yes maaya , makkalidam kollai adipathey velaiyagi vitahu.