மழை வரும் முன் மொபைலுக்கு SMS வரும்கனமழை குறித்த வானிலை எச்சரிக்கை தகவலினை இனி சிங்கப்பூரில் பொதுமக்கள் குறுந்தகவல் வடிவில் பெற்றுக் கொள்ளலாம்.

இச்சேவையினை பெற விருப்பம் தெரிவிப்பவர் களுக்கு வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, மத்தியப் பகுதி உட்பட சிங்கப்பூரின் 5 பகுதிகளிலும் கனமழை வரும் என்று எதிர்பார்க்கும் நேரம் குறித்த தகவலை குறுந்தகவலாக பெற்று கொள்ளலாம் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது. கனமழை வருவதற்கு 15 முதல் 45 நிமிடங்களுக்குள் எச்சரிக்கை குறுந்தகவல் அனுப்பப்படும். கனமழையின் போது அலையேற்றமும் இருக்குமா என்பதைப் பற்றிய விவரங்கள் உடன் கனமழை நிற்கும் நேரம், மேலும் கனமழை தொடருமா என்பது குறித்த விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். தேசிய சுற்றுப்புற வாரியம், பொதுப் பயனீட்டுக் கழகம் இணைந்து வழங்கும் கனமழை, நீர்நிலை விழிப்பூட்டுச் சேவையின் ஒரு பகுதியே மேற்கூறிய குறுந்தகவல் சேவை.

No comments: