வேற்று கிரகங்களில் கூட உயிர்கள் தோன்றியிருப்பதற்கும் வாழ்வதற்கும் சாத்தியக்கூறுகள்


உயிர்களின் இன்றியமையாத மூலக்கூற்று வேதிப் பொருட்களாகக் கருதப்படும் ஆறு இரசாயனங்களில் ஒன்றுக்கு மாற்றாக வேறொரு இரசாயனத்தைப் பயன்படுத்தி உயிர்வாழும் முதல் உயிரினம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மகாணத்திலுள்ள ஒரு ஏரியில் கண்டரியப்பட்டுள்ள இந்த நுண்ணுயிரி, பாஸ்பரஸ் என்ற மூலக்கூறுக்கு பதிலாக நச்சுத்தன்மை கொண்ட ஆர்செனிக்கை தனது உயிரணுக் கட்டமைப்பில் பெற்றுள்ளது.

மூற்றிலும் மாறுபட்ட வேதிக்கட்டமைப்பு கொண்ட வேற்று கிரகங்களில் கூட உயிர்கள் தோன்றியிருப்பதற்கும் வாழ்வதற்கும் சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்ற நெடுங்கால அபிப்பிராயத்துக்கு வலுச்சேர்ப்பதாக இந்தக் கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.

கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்பரஸ் மற்றும் சல்பர் ஆகிய ஆறும் உயிர்களுக்கு இன்றியமையாத வேதிப்பொருட்கள் என்று கருதப்பட்டு வந்தன.

ஆனால் எக்ஸ்டிரீமோஃபீல் என்று அழைக்கப்படுகின்ற இந்த புதிய பாக்டீரியாவோ, இந்த ஆறில் ஒன்றைப் பயன்படுத்தாமலேயே உயிர் வாழும் தன்மையைப் பெற்றுள்ளது.

இவ்வகையான வித்தியாசமான உயிரினங்கள் பூமிக்குள்ளேயும் பூமிக்கு வெளியிலும் தேடப்படுவதற்கான கதவுகளை இந்தக் கண்டுபிடிப்பு திறந்துவிட்டுள்ளது என்று இந்த பாக்டீரியா பற்றிய ஆராய்ச்சியின் முக்கிய விஞ்ஞானியான, நாஸா - அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின், ஃபெலீஸா உல்ஃப் சைமன் தெரிவித்துள்ளார்.
ஒலி ஆராய்ச்சியாளர்கள் இந்த பாக்டீரியாவை எடுத்து அதற்கு ஆர்செனிக் நச்சு இரசாயனம் கொண்ட சூழலில் வளர்த்தபோது, இந்த பாக்டீரியாக்கள் அழியாமல் இருந்ததோடு, தமது டி என் ஏவில் பாஸ்பரஸ் இருக்க வேண்டிய இடங்களில் எல்லாம் இவை ஆர்செனிக்கை அமர்த்திக்கொண்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



நாம் இதுநாள் வரையில் கண்டறிந்தவற்றுக்கு மாறாக உயிர்கள் அமைய முடியும் என்று இந்தக் கண்டுபிடிப்பு காட்டும் நிலையில், பிரபஞ்சத்தில் மற்ற மற்ற இடங்களில் எந்தெந்த வகையிலெல்லாம் உயிர்கள் தோன்றலாம்?


விஞ்ஞானி ஃபெலீஸா உல்ஃப் சைமன்

Post a Comment

0 Comments