ஞானத்தை அடைய விரும்புபவனுக்கு


ஞானத்தை அடைய விரும்புபவனுக்கு உள்ள ஒரே எதிரி அவனுடைய சொந்த மனமே. தன்னையே வென்றவன் தனக்குத் தானே நண்பனாகிறான். உன்னைக் காட்டிலும் உனக்கு சிறந்த நட்பு ஒருவனும் கிடையாது. உனக்கு கொடிய பகைவனும் நீயே. இந்த இரு தன்மைகளும் நம் மனத்திடையே உள்ளன. மனம் நமக்கு நட்பாகும் போது.
உலகமே நட்பாகத் தோன்றும். நம்மை நாமே வெறுக்கும் போது அது பகையாக தெரியும். கற்புடைய மனைவியைக் காதலித்து அறவழியில் நடந்தால் இப்பூமியிலேயே சுவர்க்கத்தைக் காணலாம். ஒருவனுக்கு தன் வீடே சிறந்த வாசஸ்தலம். மலை, காடு என்று சுற்றித் திரியத் தேவையில்லை. வீட்டிலே தெய்வத்தைக் காணத் திறமையில்லாதவன் மலைச்சிகரத்திற்குச் சென்றாலும் கடவுளைக் காணமுடியாது.உயிர்களுக்கு தீங்கிழைப்போர் உண்மையான பக்தராக மாட்டார். எந்த உயிரையும் வெறுப்போரும் கடவுளின் தொண்டர் அல்ல. மாமிசம் புசிப்போரும் கடவுளை நெருங்க முடியாது. ஜீவஹிம்சை செய்பவரை கடவுள் மன்னிக்க மாட்டார். உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற உண்மையை கீதை ஆதாரமாகக் கொண்டது. தீமைகளை எதிர்த்து போராடி, நன்மையை நிலைநாட்ட வேண்டும். கடவுளிடம் சரணாகதி அடைதலே யோகம்.

Post a Comment

0 Comments