கரூரில் மீண்டும் மணல் கொள்ளை & பள்ளி மாணவி சாதனை

கரூரில் மீண்டும் மணல் கொள்ளை அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் மணல் லாரி மோதி ஒரு கல்லூரி மாணவி இறந்ததைத் தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் பொது மக்களால் சேதப்படுத்தப்பட்டன. அப்போது தேர்தல் பிரசாரத்திற்கு வந்த ஜெயலலிதா, அ.தி.முக., ஆட்சிக்கு வந்தால் மணல் கொள்ளை முற்றிலும் தடுக்கப்படும் என்று கூறினார். அதேபோல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால் ஒரு மாத காலம் நின்றிருந்த மணல் கொள்ளை தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. அரசு உ‌டனே நடவடிக்கை எடுத்து இதைத் தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
மணல் கொள்ளை தடுத்து கரூர் மக்களின் உயிரை அரசாங்கம் காப்பாற்ற வேண்டும் .

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

கரூரை சேர்ந்த நான்கு வயது பள்ளி மாணவி தொட ர்ந்து நான்கு மணி நேரம் நேற்று சிலம்பாட்டம் ஆடி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெ ற்று சாதனை படைத்துள்ளார். கரூரை அடுத்த ராமேஸ்வரப்பட்டி பகுதியை சேர்ந்த ரவீந்திரன்- சங்கீதா தம்பதியினரின் மகள் ரக்ஷனா (4) இவர் பரணி பார்க் மெட்ரிக் பள்ளியில் யு.கே.ஜி., படிக்கிறார். இரண்டு வயது முதல் சிலம்பம் கற்று கொண்ட ரக்ஷனா, நேற்று காலை 6.30 மணியில் இருந்து தொடர்ந்து நான்கு மணி நேரம் சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்ச்சி பரணி பார்க் பள்ளி வளாகத்தில் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 10.30 மணி வரை இடைவிடாமல் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் முன்னிலையில் சிலம்பம் சுற்றி இந்திய சாதனை புத்தகத்தில் மாணவி ரக்ஷனா இடம் பெற்றார். அப்போது இந்திய சாதனை புத்தக நடுவர் டிராகன் ஜெட்லீ உடனிருந்தார். மாணவி ரக்ஷனாவுக்கு நட ந்த பாராட்டு விழாவில் மா வட்ட விளையாட்டு அலுவலர் புண்ணிய மூர்த்தி பேசியதாவது: கடந்த காலங்களில் உலக சாத னை செய்தவர்கள் பட்டியலில் பள்ளி மற்றும் கல்லூரி மாண வ, மாணவியர்கள் தான் இடம் பெற்றுள்ளனர். முதன் முதலாக நான்கு வயது சிறுமி ரக்ஷனா, நடுவர் கொடுத்த 10 நிமிட ஓ ய்வை கூட எடுக்காமல் நான்கு மணி நேரம் தொடர்ந்து சிலம்ப ம் சுற்றியது வியப்பாக உள்ளது. சிறுமி ரக்ஷனாவின் சாதனை எதிர்காலத்தில் உலக சாதனை பட்டியலில் இடம் பெற நாம் வாழ்த்த வேண்டும். இங்குள்ள மாணவ, மாணவியர் ஏதோ நிகழ்ச்சிக்கு வந்தோம், சென்றோம் என இருக்க கூடாது. ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு பிரிவில் சாதனை படைக்க பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

பெற்றோர் அவர்களது விருப்பங்களை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது. குழந்தைகளுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளதை தெரிந்து கொண்டு, அதற்கேற்ற பயிற்சியை முறையாக கற்றுகொடுக்க வேண்டும். மாணவி ரக்ஷனாவுக்கு இரண்டு வயது முதல் சிலம்பம் கற்று கொடுத்து, சாதனை படைக்க காரணமாக இருந்த பெற்றோரை நாம் கைதட்டி உற்சாக படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கரூர் பரணிபார்க் கல்வி நிறுவன தாளாளர் மோகனரங்கன், செயலாளர் பத்மாவதி, முதன்மை முதல்வர் ராம சுப்ரமணியன், கரூர் அரசு மருத்துவமனை டாக்டர் செல்வம், நிர்வாக அலுவலர் சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
வாழ்த்துக்கள் ரக்ஷனா ,
சிறிய வயதில் நல்ல முயற்சி , இந்த சாதனைக்கு உதவிய அணைத்து உள்ளங்களுக்கும் நன்றி

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

4 comments:

மாய உலகம் said...

அன்பு நண்பரே... பதிவை இட வேண்டும் என்ற அவசரத்தில் தலைப்பு தவறிவிட்டது... இணைத்துவிட்டேன் நண்பரே மன்னிக்கவும்

மாய உலகம் said...

மணல் கொள்ளை அடிப்பவர்களை காட்டிக்கொடுத்து வளத்தை காப்பாற்ற வேண்டும்...

மாய உலகம் said...

நான்கு வயது சிறுமி நான்கு மணி நேரம் சிலம்பாட்டமா...சாதாரண விஷயம் இல்லை... அந்த சிறுமிக்கும், இந்த பதிவுக்கும் வாழ்த்துக்கள்

karurkirukkan said...

முடிந்தால் மணல் கொள்ளைகளை எங்கு நடந்தாலும் அதை பற்றி உங்கள் தளத்தில் பதிவேற்றவும் , ஏன் என்றால் இயற்கை வளங்களை அழிப்பது அல்லாமல் , மண் ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகள் மனிதர்களை ஏனோ இடித்து கொன்று விட்டு இரக்கமில்லாமல் சென்று விடுகிறார்கள், கடைசியாக கரூரில் ஒரு கல்லூரி படிக்கும் முதலாமாண்டு மாணவி காலை கல்லூரிக்கு செல்லும்போது ஒரு மணல் லாரி அந்த மாணவி வந்த இரண்டு சக்கர வாகனத்தில் இடித்ததில் அந்த இடத்திலேயே மாணவி பலியானார் , அந்த மாணவியின் வீட்டில் எவ்வளவு கனவில் வளர்த்து இருப்பார்கள் , அனைத்தும் ஒரு நிமிடத்தில் தவிடு பொடி ஆக்கி விடுகிறார்கள் இந்த மணல் லாரி ஓட்டுபவர்கள் .

@@@@@@@@@@@@@@@@

இந்த மணல் கொள்ளை பற்றி படிக்கும் யாராவது உயர்அதிகாரி இதை சரி செய்ய மாட்டாரா என்ற ஏக்கம் தான் !