மென்பொருள் மூலம் பிடிபட்ட திருடன்

by 6:03 PM 0 comments


லண்டன் கலவரத்தின் போது திருடப்பட்ட தனது மடிக்கணனியை தனது தொழில்நுட்பத் திறனைக் கொண்டு ஒருவர் திருடனைக் கண்டுபிடித்துள்ளார்.அமெரிக்காவின் புலனாய்வுப் பணியகமான FBI மற்றும் நாசாவில் பணிபுரிந்த கிறெங் மார்டின்(29) என்பவரே திருடப்பட்ட தனது மடிக்கணனியை தடயமறி மென்பொருளை பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளார்.

தடயமறி மென்பொருளை மடிக்கணினியின் இடத்தைத் துல்லியமாகக் கண்டுபிடித்து.
அது மட்டுமல்லாது அதன் கமெராவினையும் செயற்படுத்தி super-snoop எனும் மென்பொருளை இயங்கவைத்து சந்தேக நபர் இணையத்தில் உலாவுவதையும் வெளிக்காட்டியது.

இதுகுறித்து கிறெங் மார்டின் கருத்து தெரிவிக்கையில்,

“எனது மடிக்கணனி தொலைந்தது எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. ஏனெனில் எனது வேலைகள் ஸ்தம்பிதம் ஆகிவிட்டன. எனது மடிக்கணனியை மீட்பதே தேவையாக இருந்தது. காவற்துறையினர் எனது இடத்திற்கு வந்து கைரேகைகளைப் பதிந்துவிட்டு திருடியவரை கண்டுபிடிப்பது சிரமமென்று கூறிய போது தான் நான் பதிந்துவைத்திருந்த தடயமறி கருவியின் நினைவு வந்தது“ என்றார்.

மென்பொருளைச் செயற்படுத்திய போது அவரது iPhone இல் அது இயங்கு நிலையில் உள்ளது என தகவல் வந்தது. இதன் மூலமே அவர் சந்தேக நபரை கண்டுபிடித்ததாக தெரிவித்தார்.
இதன்பின்னரே பொலிஸாருக்கு தகவல் கொடுத்து சந்தேகநபரை கைது செய்ததாக கூறினார்.
மார்டின் தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு துறையில் 12 வருட அனுபவம் கொண்டவராம். FBI இன் தொழில்நுட்ப ஆலோசகராகவும், அமெரிக்க இரகசிய சேவை மற்றும் நாசா ஆகியவற்றிலும் பணியாற்றி வந்துள்ளார். அத்துடன் 500 இற்கும் மேற்பட்ட நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் சட்ட ஒழுங்காக்கல் முகவரகங்கள் ஆகியவற்றுக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

0 comments: