சமச்சீர் கல்வியை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு

சமச்சீர் கல்வியை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதையடுத்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது.


பெற்றோர், மாணவர் கோரிக்கையை ஏற்று நடப்பாண்டே சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்பில் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். 25 காரணங்களை ஆய்வு செய்து தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.தமிழகத்தில் நடப்பு ஆண்டு முதலே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த 28.07.2011 அன்று தொடங்கி 6 நாட்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை 04.08.2011 அன்றுடன் முடிவடைந்தது.

தீர்ப்பு வழங்குவதை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அத்துடன், 10.08.2011க்குள் சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இந்தநிலையில் சுப்ரீம்கோர்ட் இன்று (09.08.2011) இறுதி தீர்ப்பு வழங்கியது. காலை 10.30 மணிக்கு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள் ஜே.எம்.பன்சால், தீபக் வர்மா, சவுகான் பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது.

Post a Comment

0 Comments