ஐந்தாண்டுகள் இயக்குனர் வசந்த்தை காக்க வைத்த சூர்யாகேளடி கண்மணி படத்தை இயக்கியதன் மூலம் தரமான தமிழ் இயக்குனர்களின் பட்டியலில் இடம்பிடித்தார் இயக்குனர் வசந்த்.

பிறகு இன்று மிகப்பெரிய மாஸ் ஹீரோவாக இருக்கும் சூரியாவை ‘ நேருக்கு நேர்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.அப்போது கார்மண்ட் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தாராம் சூரியா. தனக்கு நடிப்பில் விருப்பம் இல்லை. என்னை விட்டு விடுங்கள் என்று சொன்ன சூரியாவிடம் “ ரொம்ப நல்லதாப் போச்சு..! எனக்கு நடிப்புத் தெரியாக ஹீரோதான் தேவை. நான் சொல்வதை மட்டும் கேள்!” என்று சொல்லி சூரியாவை அழைத்து வந்து ஹீரோவாக்கிய வசந்த், முதல் பத்து நாட்கள் மிகவும் கஷ்டப்பட்டு படம் பிடித்திருகிறார். சூரியாவுக்கு நடிப்பு வரவில்லை என்பதும், வெட்டியாக ஃபிலிம் செலவாகிறது என்பதும் படத்தின் தயாரிப்பாளர் மணிரத்தினத்தின் காதுகளை எட்டியிருகிறது.

வசந்தை அழைத்த அவர், “ சூரியாவை தூக்கி விட்டு பிரசாந்தை அந்தக் கேரக்டரில் பயன்படுத்துங்கள்” என்று உத்தரவிட்டாராம். ஆனால் சூரியாவை ஒரு ஸ்டார் ஆக்கியே தீருவது என்பதில் பிடிவாதமாக இருந்த வசந்த், கஷ்டப்பட்டு படத்தை எடுத்துக்கொண்டிருந்தாராம். கல்கத்தாவில் சூரியா-சிம்ரன் சம்பந்தபட்ட காதல் மற்றும் பாடல்காட்சியை படம்பிடிக்க ஆரம்பித்தபோது வந்ததாம் சிக்கல்! சிம்ரனுக்கு முத்தம் கொடுக்க முடியாமல், அதேநேரம் சிம்ரனுடன் நெருக்கமாக நடிக்க முடியாமல் கஷ்டப்பட்ட சூரியாவை “ சிவகுமார் பையன் என்று சொல்லிக்கொள்ள உனக்கு வெட்கமாக இல்லையா? “ என்று கோபத்தில் திட்டி, அடிக்கவும் செய்தாராம். இதனால் இரவோடு இரவாக சென்னைக்கு விமானத்தைப் பிடித்து ஓடிவந்து விட்டாராம் சூரியா. அப்படியும் பொறுமையாக இருந்து, சூரியாவை சமாதனப்படுத்தி, அடுத்த சில தினங்களிலேயே கல்கத்தா வரவழைத்த வசந்த், “ எங்கெங்கே எங்கெங்கே…” என்ற டூயட் பாடலை எடுத்து திரும்பியிருகிறார்.

இப்படி விஜயுடன் நேருக்கு நேர் படத்தில் நடித்த சூரியாவுக்கு அந்தப் படம் மிகப்பெரிய அறிமுகபடமாக இருந்தது. அதன்பிறகு தொடர்ச்சியாக தோல்விபடங்களில் நடித்து வந்த சூரியாவை மீண்டும், பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் பிஸியாக்கினார் வசந்த். இந்தப் படத்தில் நடித்தபோதுதான் முதல்முறையாக தனது காதல் மனைவி ஜோதிகாவையும் சந்தித்தேன் என்று சூரியாவே சொல்லியிருகிறார்.இப்படி சூரியாவின் இன்றைய சினிமா சிம்மாசனத்துக்கு அடித்தளம் போட்டுக்கொடுத்த இயக்குனர் வசந்தை கடந்த ஐந்து ஆண்டுகளாக கால் கடுக்அலைய வைத்துள்ளார் .சூரியாவுக்கு பிதாமகன் வெளியாகியிருந்த நேரத்தில், அவரை அனுகிய வசந்த், “ சுத்தமாக எனக்குப் படங்கள் இல்லை. உனது கால்ஷீட் இருந்தால் மறுபடியும் ஒரு ரவுண்ட் வருவேன்.

எனக்கு அறுபது நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடு போதும்” என்று கேட்டிருக்கிறார். சூரியாவோ “ இன்னும் இரண்டு வருடத்துக்கு கால்ஷீட் இல்லை” என்று மறுத்து விட்டாராம். வசந்தும் சரி இன்னும் இரண்டு வருடம் காத்திருக்கிறேன். என்று டாக்குமெண்டரி படங்களை எடுத்து வயிற்றைக் கழுவினாராம். இரண்டு வருடங்கள் உருண்டோடிய நிலையில் மீண்டும் சூரியாவை சந்தித்தாராம் வசந்த்.. அபோது சூரியா “ பாலாவுக்கே கால்ஷீட் தரல. உங்களுக்கு பணம் வேண்டும் என்றால் கேளுங்கள், கால்ஷீட் எல்லாம் தரமுடியாது” என்று மறுத்து விட்டதாகவும், இல்லை இல்லை… நான் இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆனாலும் காத்திருகிறேன் என்று வசந்த் மறுபடியும் தனது காத்திருப்பை தொடங்யிருகிறார். இடையில் சத்தம் போடாதே என்னொரு சிறு பட்ஜெட் படம். அதில் நான் இன்னும் ஒரு க்ரியேட்டிவ் இயக்குனர்தான் என்று வசந்த் நீருபனம் செய்தும் சூரியாவின் மனது இறங்க வில்லையாம்.

தற்போது ஒட்டுமொத்தமாக ஐந்தாண்டுகள் சூரியாவுக்காக காத்திருந்த வசந்த், இனி சூரியாவிடம் கருணை பிறக்காது என்று முடிவான பிறகு வசந்த் தனது புதிய படத்தை தொடங்கி விட்டார்.படத்துக்கு ‘மூன்று பேர் மூன்று காதல்’ என்று பெயர் வைத்துள்ளதாக இயக்குனர் வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன. இந்தப் படத்தில் வசந்தின் ‌ரிதம் படத்தில் ஹீரோவாக நடித்த அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும்,

முதன்மை கதை நாயகனாக சேரன் நடிப்பார் எனவும் பலமாக தகவல்கள் கிடைக்கின்றன. முக்கியமான இன்னொரு காதாபாத்திரத்துக்கு புதுமுகம் ஒருவரை வஸந்த் அறிமுகப்படுத்தயிருக்கிறார் என்கிறார்கள்.

No comments: