டோனி கொடுத்த செக் பணம் இல்லாமல் திரும்பியது

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி. பல்வேறு வெற்றிகளை குவித்ததன் மூலம் புகழின் உச்சத்துக்கு சென்றுள்ளார். இதனால் அவர் போட்டிகள் மூலமும், விளம்பரங்கள் மூலமும் கோடி கோடியாய் பணம் சம்பாதிக்கிறார். டோனி ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். அந்த மாநிலத்தில் அதிக வருமான வரி செலுத்துபவர்களில் டோனியும் ஒருவர்.

அதிக வருமான வரி செலுத்துபவரான அவர் 645 ரூபாய்க்கு கொடுத்த செக் ஒன்று பணம் இல்லாமல் வங்கியில் இருந்து திரும்பியது. ஆர்.எம்.சி. ரோடு பகுதியில் டோனியின் சொத்து ஒன்று உள்ளது.

இந்த சொத்துக்கான வரியாக அவர் 645 ரூபாய் ராஞ்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும். இந்த பணத்துக்கு கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி டோனி செக் கொடுத்தார். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் டொரண்டா கிளைக்கான செக்கை அவர் கொடுத்தார்.

டோனி கொடுத்த செக் மறுநாள் வங்கியின் போடப்பட்டது. ஆனால் வங்கியில் அவரது கணக்கில் போதுமான பணம் இல்லாததால் அந்த செக் பவுன்ஸ் ஆனது. பணம் இல்லாமல் அந்த செக் திரும்பிவிட்டது. அந்த வங்கியில் பணம் இல்லாமல் இருப்பது தெரியாமல் டோனி செக் கொடுத்து இருந்தது தெரியவந்தது.

பின்னர் அந்த ரூ.645 வரிக்கு அவரது தரப்பில் பணம் செலுத்தப்பட்டது. டோனி கடந்த ஆண்டில் ரூ.1 கோடிக்கு மேல் வருமான வரி கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

மதுரை சரவணன் said...

thakavalukku nanri.. vaalththukkal