இதுமட்டும் நடந்தால், பல குடும்பங்கள் வாழ்த்து ரஜினிக்கு நிச்சயம்



மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தியதுடன், ராணா படத்துக்காக அளவுக்கதிகமாக எடையைக் குறைக்கும் முயற்சியில் ரஜினி இறங்கியதுதான் அவருக்கு ஆபத்தாக முடிந்தது என்று இப்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மருந்து, மாத்திரை, மருத்துவமனை ஆகியவற்றோடு ரஜினியை தொடர்புபடுத்தி பார்க்கக் கூட விரும்பாதவர்கள் ரஜினி ரசிகர்கள். அதற்கேற்ப, ரஜினியும் கடந்த 30 ஆண்டுகளில் மருத்துவமனைக்கு சென்று யாரும் பார்த்ததில்லை.மேலும் அவருக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதயக் கோளாறு போன்ற எந்த பாதிப்பும் இல்லை என்று சமீபத்தில்தான் பேட்டியளித்திருந்தார். யோகா, இயற்கை மருத்துவம் போன்றவற்றில்தான் ரஜினி அதிக கவனம் செலுத்தி வந்தார். அரிசி உணவுகளை முற்றாகத் தவிர்த்துவிட்டார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராணா படத்துக்காக அவர் உடலை மேலும் ஸ்லிம்மாக்கும் முயற்சியில் 15 கிலோ வரை எடையைக் குறைத்துள்ளார். 20 நாட்களில் இந்த அளவு எடையைக் குறைத்துள்ளார் ரஜினி. இதற்காக மருந்து மாத்திரை எதுவும் எடுக்கவில்லையாம். வெறும் நீர்ம உணவு மற்றும் கடுமையான யோகாசனத்தை மேற்கொண்டுள்ளார் ரஜினி.

இதுகுறித்து ரஜினியின் அண்ணன் சத்யநாராயணராவ் கெயிக்வாட் கூறுகையில், "ராணா படத்தில் ஒரு கேரக்டருக்காக தம்பி 20 கிலோ வரை எடையைக் குறைத்துவிட்டார். இதற்காக அவர் மிகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டிருந்தார். அதுதான் அவருக்கு லேசான பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஆனால் அதை அசட்டை செய்துவிட்டு தொடர்ந்து அவர் படப்பிடிப்புக்குப் போனதால் காய்ச்சல் மற்றும் வயிற்றுக்கோளாறு அதிகரித்துவிட்டது. ஆனால் பயப்படும்படி ஒன்றுமில்லை...", என்றார்.

மதுவுக்கு 'பை' சொன்ன ரஜினி!!

ரஜினி எந்த அளவுக்கு மது அருந்துவார் என்பது வெளிப்படையாகத் தெரிந்த ஒன்று. சில நேரங்களில் 10 பெக் வரை கூட போவது அவர் வழக்கமாம். ஆனால் அவரது 61வது பிறந்த நாள் கொண்டாடப்பட்ட தினத்திலிருந்து குடிப்பதை அடியோடு நிறுத்திவிட்டாராம் ரஜினி. இன்றுவரை ஒரு சொட்டு மதுவைக் கூட அவர் தொடவில்லையாம்.

கடுமையான உணவுக் கட்டுப்பாடு மற்றும் மதுப்பழக்கத்தை திடீரென கைவிட்டது காரணமாகவே அவருக்கு இந்த நிலை ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனாலும், இனி மதுவைத் தொடுவதில்லை, சிகரெட்டையும் முழுமையாக விட்டுவிடுவதாக ரஜினி உறுதியெடுத்துள்ளதை அவரது குடும்பத்தினரே ஆச்சரியத்துடன் பார்க்கிறார்களாம்.

இந்த ஆச்சர்யம், குடி மற்றும் மதுவை விடமுடியாமல் தவிக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பது சூப்பர் ஸ்டாரின் விருப்பமாம். இதுமட்டும் நடந்தால், பல குடும்பங்கள் வாழ்த்து ரஜினிக்கு நிச்சயம்!!


வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் நலமாக இருப்பதாக அவரது மனைவி லதா தெரிவித்தார்.
வைரஸ் காய்ச்சல், நீர்ச்சத்து குறைவால் மே 4-ம் தேதி சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினிகாந்த். அவருக்கு முழு ஓய்வு தேவைப்பட்டதால் மருத்துவமனையிலேயே தங்கியிருந்தார். பார்வையாளர்களை தவிர்த்து ஓய்வில் இருந்த அவர், கடந்த செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார்.
போயஸ் தோட்ட இல்லத்தில் ஓய்வில் இருக்கும் ரஜினியின் உடல் நிலை குறித்து அவ்வப்போது வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன. உடலில் இன்னும் சீரான முன்னேற்றம் ஏற்படாததால், அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுக்க போகிறார் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவரது உடல் நிலை குறித்து திடுக்கிட வைக்கும் வதந்திகள் பரவியது. இதனால் ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தொலைபேசியில் ரஜினியின் உடல் நிலைப் பற்றி பேசியவாறு இருந்தனர்.
இதனால் செய்தியாளர்கள் ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில் குவிந்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் லதா ரஜினிகாந்த் கூறியது:
""ரஜினியின் உடல் நிலை பற்றி மிகவும் மோசமான வதந்திகள் வந்துள்ளன. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை உருவாக்கி இருக்கிறது. இப்போது குணம் அடைந்துள்ளார். ஓய்வில் இருக்குமாறு அவரை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதைப் பின்பற்றி அவரும் ஓய்வில் இருந்து வருகிறார்.
ரஜினி மிகவும் சுறுசுறுப்பான மனிதர், ஓரிடத்தில் உட்கார வைப்பது கடினம். ஆகவே அவரை கவனமாக பார்த்துக் கொள்கிறோம். கோடை காலத்தில் வழக்கமாக வெளிநாடுகளுக்குச் செல்வோம். "ராணா' படப்பிடிப்பை தொடங்குவதில் அவசரம் காட்டமாட்டோம். தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளதை அறிந்தோம். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எங்களது வாழ்த்துகள்'' என்றார் லதா ரஜினிகாந்த்.

Post a Comment

0 Comments