தமிழ் நாட்டில் பிறக்க குடுத்து வைக்கணும்


இனிமேல் நம்ம அதிகமா வேளைக்கு போக தேவை இல்லைன்னு தோணுது , ஏற்கனவே ஊருக்கு பாத்து பேரு வேளைக்கு போக கோவில்ல சோறு வாங்கி சாப்பிட்டுகிட்டு இருகிறாங்க, இனிமேல் யார் ஆட்சிக்கு வந்தாலும் இலவசம் கண்டிப்பா மக்களுக்கு உண்டு , வீட்ல டிவி இல்லை என்று கவலை இல்லை , இனி பேன், மிக்சி , கிரைண்டர் , லேப்டாப் , இன்னும் எக்கச்சக்க இலவசங்கள் வரப்போகின்றன , உலகத்திலே அதிக சோம்பேறிகளை உருவாக்குவது என்று எப்படி நம்முடைய ஆட்கள் ஆராய்சி செய்து வருகிறார்கள் போலும் , அதனால் தான் இவ்வாறு எல்லாம் நாட்டில் நடக்கின்றன ,

வேலைவாய்பு அலுவலகத்தில் வேலைக்கு பதிவு செய்து வைத்து இருந்தால் கூட போதும் , அதற்கு மாத மாதம் உதவி தொகை தருகிறார்கள் , அத வாங்கி செலவு செஞ்சிட்டு கோவில்ல போய் சாப்பாடு வாங்கி சாப்பிட்டு , வீட்ல போய் டிவியில் கிரிக்கெட் பாத்துகிட்டு பொளப்பு போகின்றது,

இதெல்லாம் பத்தாது என்று தேர்தல் வந்தால் மக்களின் கைகளில் பணம் புகுந்து விளையாடுகிறது , குடிக்க மது , சாப்பிட பிரியாணி .................???????????????


மொத்தத்தில் தமிழ் நாட்டில் பிறக்க குடுத்து வைக்கணும் ..........

No comments: