குழந்தை வளர்ப்பு முறையில் கவனிக்கவேண்டியது


குழந்தைகளை எந்த சூழ்நிலையிலும் யாரோடும் ஒற்றுமை படுத்தி (compare) செய்து குழந்தைகள் முன்பு நீங்கள் பேசவே கூடாது , அவ்வாறு பேசுவதால் குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மை உருவாக வாய்ப்பு உள்ளது , தாழ்வு மனப்பான்மை உருவாகி விட்டால் , அது மெல்ல வளர்ந்து அந்த குழந்தையின் வளர்ச்சியை அது மெல்ல மெல்ல சிதைத்து விடும் , குழந்தைகளை வளர்க்கும் போது அவர்களிடம் தோல்வியை சொல்லி பயமுறுத்த கூடாது

அதே போல் தோல்வியை ஏற்று கொள்ளும் பக்குவத்தை அவர்கள் ஏற்று கொள்ளும் பக்குவத்தை நாம் வளர்க வேண்டும் அவர்களுக்கு வெற்றி மனப்பான்மையை சிறுவயது முதலே நாம் கொண்டு வரவேண்டும் , அவர்களுடன் நீங்கள் விளையாடும்போது அவர்களை நீங்கள் ஜெயிக்க வைத்து விட்டால் அவர்களுக்கு தன்னம்பிக்கை பிறக்கும், அந்த வெற்றி மனப்பான்மையை நாம் அவர்களிடம் சிதைக்காமல் வளர்த்தோமனால் , அவர்கள் சிறந்த தன்னம்பிகையாளர்களாக வாய்ப்பு உண்டு.



குழந்தைகளை நாம் சுயமாக சிந்திக்கவும் விட வேண்டும் , நாம் அவர்களை அன்பு என்ற பெயரில் மிகவும் பொத்தி பொத்தி வளர்க்கும் போது அவர்களிடம் அதிகமாக அடுத்தவர்களை சார்ந்து இருக்கும் பண்பு வளர ஆரம்பிக்கும் , குழந்தைகளை நாம் அன்போடும் அதேசமயம் எச்சரிக்கையோடும் வளர்க்க வேண்டும் .

Post a Comment

1 Comments

கருத்துகள் மிக அற்புதம்...

வருகை தாருங்கள்...

http://parentsactivitytamil.blogspot.com