பின்லாடன் தான் செத்தது என்று எப்படி உறுதி செய்தார்கள் ?


அமெரிக்கப்படை நடத்திய வேட்டையில் கொல்லப்பட்டது பின்லாடன தான் என்பதை உறுதி செய்ய அமெரிக்க சி.ஐ.ஏ. சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அபோதாபாத் நகரில் உள்ள மாளிகையில் வேட்டை சம்பவம் நடந்து முடிந்து பின்லாடன் கொல்லப்பட்டதும், அவரது மனைவிகளில் ஒருவரை கொண்டு அடையாளம் காண்பிக்கப்பட்ட பின், இறந்த பின்லாடனின் புகைப்படம் அவரது ரத்த மாதிரிகள், திசுக்களை சி.ஐ.ஏ.,யின் அதிகாரப்பூர்வ டி.என்.ஏ. தொழில்நுட்ப வல்லுனர்கள் சேகரித்தனர். மேலும் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் தாக்குதலுக்கு பின் விசாரணைக்காக கைது செய்யப்பட்ட ஒசாமாவின் மகன்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்த ரத்த மாதிரிகள், திசுக்கள் எடுக்கப்பட்டு, முன்பே பாதுகாத்து வைத்திருந்தனர். கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்னர் தான் ஒசாமாவின் சகோதரி ஒருவர் மூளை புற்றுநோயால் அமெரிக்காவின் மாஸிசூசட்ஸ் மாகாணத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனினறி இறந்தார். அவரது ரத்த மாதிரிகள், திசுக்கள் பாதுகாப்பாக எடுக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன . அவை பின்லாடனின் ரத்த மாதிரிகளுடன் 99.9 சதவீதம் ஒத்துப்போவதால் , ‌கொல்லப்பட்டது பின்லாடன்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. தவிர அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவக்குழுவினர் தான் இரண்டே மணிநேரத்தில் பின்லாடனில் மரபணு சோதனையினை மேற்கொண்டதாக டைம் பத்திரிகையில்செய்தி வெளியிடப்பட்டுள்ளது..

No comments: