குழந்தை வளர்ப்பு முறையில் கவனிக்கவேண்டியது - போன பதிவை நிறைய பேர் படித்தார்கள் ஆனா என்ன மூணு பேர்தான் ஒட்டு போட்டார்கள் , ஒரு கமெண்ட்ஸ் கூட வரவில்லை , உங்க கருத்தை கொஞ்சம் பகிர்ந்து கொண்டால் இன்னும் நாலு பேத்துக்கு உங்கள் அனுபவம் கூட உபயோகப்படும்.
*****************
பொதுவாக இரண்டு குழந்தைகள் உள்ள வீட்டில் பார்த்தோமானால் முதல் குழந்தையை விட இரண்டாம் குழந்தை கொஞ்சம் அறிவு அதிகம் , துரு துரு என்று இருப்பது , நன்றாக மற்றவர்களிடம் பழகுவது இது போன்ற பல வேறுபாடுகள் இருக்கும் , ஆனால் இந்த வேறுப்பாட்டை பெற்றோர்கள் நினைத்தால் சரியான முறையில் இருவரையும் சமமாக கொண்டு வந்து விடலாம் ,ஆனால் நடப்பது என்னவோ எதற்கு எதிராக தான் ?!
திருட்டுபயலே படத்தை கூட ஒரு எடுத்துக்காட்டாக சொல்லலாம் , பொதுவாக பெற்றோர்கள் செய்வது என்னவென்றால் குழந்தைகளை வைத்து கொண்டு மற்றவர்களிடம் பேசும்போது ,
"சின்னப்பையன் ரொம்ப தெறமசாலி அவன் எப்படியும் பொழச்சுக்குவான்"
" ஆனா பெரியவனா நினச்ச தான் ரொம்ப கவலையா இருக்கு "
இது போல பெற்றோர்கள் சொல்வதை அந்த குழந்தை கேட்கும்போது , அது எவ்வளவு வருத்தப்படும் , அந்த வருத்தம் காலப்போக்கில் தன்னுடைய சகோதரன் மீது தன்னை அறியாமல் ஒரு மனதளவில் ஒரு ஏற்ற தாழ்வு வந்துவிடும் , வெறுப்பு வந்துவிடும்.
சிறுவயதில் ஒரு குழந்தை தன்னுடைய திறமை மீது எந்த அளவு நம்பிக்கை வைக்கிறதோ அதை பொறுத்துதான் அதனுடைய வளர்ச்சி இருக்கும் , குழந்தை வளர வளர அது தன் வாழ்நாளில் சந்திக்கிற வெற்றி தோல்வியை வைத்து அந்த நம்பிக்கையின் வடிவம் கூடவும் குறையவும் ஆகும் ,
இதற்கு இடையே பெற்றோர்கள் தங்களது பங்கிற்கு
நீ ஒரு ஒதவாக்கர ,
நீ எப்படித்தான் பொழைக்க போறியோ ,
ஒன்னவிட சின்ன பையன் எவளோ திறமையா இருக்கான் !
இப்படியெல்லாம் திட்டும்போது அந்த குழந்தையின் திறமை மீது அதற்கு உள்ள நம்பிக்கை சிறிது சிறிதாக சிதைய ஆரம்பிக்கும் , தன்னுடைய திறமையை வெளிக்காட்ட முடியாத சூழலை வீட்டில் பெற்றோரே உருவாகும்படி ஆகி விடுகிறது
தொடரும் .........
3 Comments
நான் ரசித்த வரிகள் இவை..
///இது போல பெற்றோர்கள் சொல்வதை அந்த குழந்தை கேட்கும்போது , அது எவ்வளவு வருத்தப்படும் , அந்த வருத்தம் காலப்போக்கில் தன்னுடைய சகோதரன் மீது தன்னை அறியாமல் ஒரு மனதளவில் ஒரு ஏற்ற தாழ்வு வந்துவிடும் , வெறுப்பு வந்துவிடும்.
///
கருத்துச் செறிவு மிகுந்துள்ள வரிகள்..!
நீங்க மனசு விட்டு பாராட்டினது ரொம்ப சந்தோசம்