சுமார் இராண்டாயிரம் பேர் திருமணம் நடந்த தேவாலயத்துக்கு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தார்கள்.வெஸ்ட்மின்ஸ்டர் அபி தேவாலயத்தில் நடந்த இந்த திருமணத்துக்காக மத்திய லண்டன் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தார்கள்.இவர்களின் பாதுகாப்புக்காக பொலிஸார் நின்ற பொலிஸார் எந்தவிதமான அசம்பாவிதமும் இன்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் சிறப்பாக நடந்ததாகக் கூறியுள்ளனர்.இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இரு ஆர்ப்பாட்டங்களும் அமைதியாக நடந்தன.திருமண முடிவில் திறந்த குதிரை வண்டியயில் பவனியாக வந்த ஜோடி, பக்கிங்ஹாம் மாளிகையின் மேல்மாடத்தில் இருந்து பொதுமக்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார்கள்.திருமணத்தை முன்னிட்டு இளவரசர் வில்லியத்துக்கு டியூக் ஒஃப் கேம்பிரிஜ் என்ற பட்டமும், கேட் மிடில்டனுக்கு டச்சஸ் ஒஃப் கேம்பிரிஜ் என்ற பட்டமும் மகாராணியாரால் வழங்கப்பட்டது.
திருமண உறுதி மொழி
திருமண பந்தத்தில் கணவனாக தான் ஏற்கும் வில்லியம்முக்கு "அன்பையும், ஆதரவையும், கௌரவத்தையும் வழங்குவேன்" என்று கேட் மிடில்டன் திருமண உறுதிமொழி வழங்கினார்.
வில்லியம்மின் தாயார் இளவரசி டயானா இளவரசர் சார்ல்ஸுடனான தனது திருமணத்தின்போது, "கணவனுக்கு கீழ் படிந்து நடப்பேன்" என்ற வரிகளை தனது திருமண உறுதிமொழியில் சொல்லாததுபோலவே, கேட் மிடில்டனும் அவ்வார்த்தைகளை சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இளவரசர் வில்லியம் அணிவித்த மோதிரத்தை கேட் மிடில்டன் அணிந்துள்ளார்.வேல்ஸிலிருந்து எடுக்கப்பட்ட தங்கத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட மோதிரம் இது.
பிரிட்டிஷ் முடிக்குரிய வாரிசுகளில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இளவரசர் வில்லியம் தனது நீண்ட நாள் காதலி கேட் மிடில்ட்டனை லண்டனில் நடந்த கோலாகலமான வைபவத்தில் திருமணம் செய்துகொண்டுள்ளார்.லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தில் நடந்த கண்கவர் திருமண சடங்கில் கேண்டர்பரி பேராயர் டாக்டர் ரோவன் வில்லியம்ஸ் இந்த ஜோடியை கணவன் மனைவியாக அறிவித்தார்
0 Comments