"மேட்ச் ஃபிக்ஸிங்" இலங்கை கிரிக்கெட்டில்


போட்டிக்கு முன்னரே முடிவை நிர்ணயிக்கும் மேட்ச் ஃபிக்ஸிங் முறைகேடுகள் இலங்கை கிரிக்கெட் அணியில் 1992ம் ஆண்டு முதலே நடந்துவருவதாக அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஹஷான் திலகரட்ண குற்றம்சாட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பரந்தபட்ட அளவில் இந்த சீர்கேடு இலங்கை அணியில் தொடர்ந்து இருந்து வந்துள்ளது என்றும் ஹஷான் திலகரட்ண ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார் என செய்திகள் தெரிவிக்கின்றன.போட்டிக்கு முன்னர் முடிவை நிர்ணயிக்கும் முறைகேட்டுடன் தொடர்புகொண்ட இலங்கை வீரர்கள் அனைவரையும் தனக்கு தெரியும் என்றும் ஹஷான் திலகரட்ண கூறியுள்ளதாக அவரை மேற்கோள்காட்டி இலங்கையின் டெய்லி மிர்ரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
1984 முதல் 2004 ஆம் ஆண்டு வரையில் ஹஷான் திலகரட்ண இலங்கை அணிக்காக விளையாடி வந்தார். 1996 ஆம் ஆண்டு இலங்கை அணி அர்ஜுன ரணதுங்க தலைமையில் உலகக் கோப்பையை வென்ற அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார்

No comments: