வாரத்திற்கு 5 சோப்புகள் சாப்பிடும் வினோத பெண்

தினமும்,காலை,மாலை உட்கொள்ளும் உணவுக்குபதிலாக சலவை சோப்புகட்டிகள், ‌சோப்புதூள்களை உட்கொண்டு அதற்கு அடிமையாக வாழும் அமெரிக்காவின்அதிசய இ‌ளம் பெண்ணிற்கு அந்நாட்டு டாக்டர்கள் உணவு பழக்கத்தினை மாற்ற முயற்சிசெய்து வருகின்றனர்.இது குறித்து டெய்லி மெய்லி எனும் பத்திரிகையில் வெளியி்ட்டுள்ள செய்தியில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் டாம்ப்‌ஸ்ட் ஹான்டர்சன் (19). இந்த பெண்ணிற்கு சிறுவயதிலேயே செரிமாணம் ஆகாத , உணவுஅல்லாத பொருட்களை ‌சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது. அதில் டிடெர்ஜென்ட் சோப், சோப்தூள் களை விரும்பி சாப்பிடுவாராம். இவரின் நடவடிக்கையினை பார்த்த இவர்களது பெற்றோர்கள் தகுந்த மனநல டாக்டரிடம் காண்பித்துள்ளனர். டாக்டரும் இவருக்கு உணவு பழக்கத்தினை மாற்ற சோப்புகளே இல்லாத , குளியல் அறை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும்படி ஆலோசனை வழங்கினார். இருந்தபோதிலும் இவரால் இந்த பழக்கத்தினை விடமுடியாமல் தவித்துவருகிறார். வராத்திற்கு 5 டிடர்ஜென்ட் சோப்புகளை சாப்பிட்டால்தான் மனதில் நல்ல சிந்தனை தோன்றுவதாக தெரிவித்துள்ளார். இந்த விநோத நோய் குறித்து மருத்துவத்துறையில் கூறப்படுவதாவது: மிகவும் அதிசயமான இந்த உணவு பழக்க முறையினை பிகா எனஅழைக்கப்படுகிறது. அதாவது செரிமாணம் ஆகாத, உணவும் அல்லாத ‌உலோகங்கள், நாயணங்கள், பிளாஸ்டிக், பேட்ரிகள் , டூத்பிரஷ்கள், பெயிண்ட்கள், மற்றும் விஷத்தன்மை கொண்ட ரசாயண பவுடர்கள் இவற்றினை உட்கொள்ளும் பழக்கம் உடையவர்களுக்கு பிகா எனும் விநோத நோயால் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நோய் இந்த பெண்ணிற்கு தாக்கியுள்ளதாலே இவர் சோப்புகள், ‌சோப்பு தூள்களுக்கு அடிமையாகிவிட்டார். மன நல மருத்துவ முறையில் இந்த பிகா எனும் விநோத நோயினை குணப்படுத்துவது கடினமே. இவ்வாறு அந்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

&&&&&&&&&&&&&&&&&&&&&

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் துவக்கம்

தமிழகம் முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று முதல் தொடங்குகிறது. பிறந்ததேதி உள்ளிட்ட பல்வேறு புதிய தகவல்கள் இந்த கணக்கெடுப்பின் போது கேட்டு பதிவு செய்யப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களை அலட்சியப்படுத்தினாலோ, தவறான தகவல் அளித்தாலோ சென்சஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: