மாணவியர் விடுதி குளியலறையில் கேமரா-எங்கே செல்கிறது இளைய சமுதாயம் ?

by 11:44 AM 2 comments
பொறியியல் கல்லூரி மாணவியர் விடுதி குளியலறையில் ஆன் செய்யப்பட்ட நிலையில் கேமரா மொபைல் போன் சிக்கியது. சக மாணவியர் குளிப்பதை மொபைல் போன் கேமராவில் பதிவு செய்து தன் காதலனுக்கு காண்பிக்கவே இவ்வாறு செய்ததாக மாணவி ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

கேரள மாநிலம் கொல்லம் நகரில் உள்ள ஒரு பொறியியல் கல்லுரி மாணவியர் விடுதி குளியலறையில் கடந்த 3-ம் தேதி மாலை விடுதி மாணவி ஒருவர் குளிக்கச் சென்றார். அப்போது அங்கு கண்ட காட்சி அவரை அதிரிச்சியுற செய்தது. குளியலறைக்குள் ஆன் செய்த நிலையில் கேமாரவுடன் கூடிய மொபைல்போன் வைக்கப்பட்டிருந்தது. அம்மாணவி விடுதி காப்பாளரிடம் புகார் செய்தார். போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சைபர் பிரிவு போலீசார் மொபைல் போனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அங்கு தங்கிப் படிக்கும் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி சிக்கினார்.

போலீசார் அவரிடம் விசாரித்ததில் வெளி நாட்டில் இருக்கும் தன் காதலன் கண்டு ரசிக்கவே இவ்வாறு செய்ததாகவும், சக மாணவியர் குளிப்பதை படம் எடுப்பதற்காக தான் தனது கேமரா வசதி கொண்ட மொபைல் போனை அங்கு வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்று ஏற்கனவே செய்திருப்பதாகவும் தெரிவித்த அவர் அவற்றை தன் காதலனுக்கு கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அவரது காதலனிடம் போலீசார் விரைவில் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். அப்பெண்ணின் அறையில் இருந்து லேப்டாப் கருவியையும் போலீசார் கைப்பற்றினர். அம்மாணவியின் மொபைல் போன், லேப்டாப்பில் வேறு ஏதேனும் குளியல் காட்சி மற்றும் அந்தரங்க காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய திருவனந்தபுரத்தில் உள்ள சைபர் குற்றிபிரிவு ஆய்வகத்துக்கு போலீசார் அவற்றை அனுப்பி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

2 comments:

கே. ஆர்.விஜயன் said...

ஆகா பயலுகதான் இப்படின்னா நீங்களுமா. அட போங்கடி நீங்களும் உன் காதலும்.

Anonymous said...

இன்னைக்கு பொண்ணுங்க தான் ரொம்ப கேவலமா இருக்காங்க