மணிரத்னம் இயக்கத்தில் விஜய்-விக்ரம்-விஷால் இணையும் படம்!

ராவணாவுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் விஜய் – விக்ரம் – விஷால் (வி3!) இணைந்து நடிக்கிறார்கள்.
மல்டி ஸ்டார் கலாச்சாரம் இந்தி – மலையாளத்தில் சர்வசகஜம். ஆனால் தமிழில் ரஜினி- கமல் இணைந்து கலக்கிய படங்களுக்குப் பிறகு, மல்டி ஸ்டார் படங்களே இல்லாமல் போயின.மணிரத்னம் தனது தளபதியில் சூப்பர் ஸ்டார் ரஜினியையும், மலையாள முன்னணி நடிகர் மம்முட்டியையும் இணைய வைத்து தளபதி எடுத்தார்.பின்னர் சூர்யா, மாதவன், சித்தார்த்தை இணைத்து ஆய்தஎழுத்து எடுத்தார்.சமீபத்தில் அவர் இயக்கி தோல்வியைத் தழுவிய ராவணாவில் விக்ரம், ப்ருத்விராஜ், கார்த்திக் என பல ஹீரோக்கள் இணைந்து நடித்தனர்.இப்போது, மீண்டும் ஒரு மல்டி ஸ்டார் படம் பண்ணுகிறார் மணிரத்னம். இதில் விஜய், விக்ரம், விஷால் ஆகிய மூன்று பேரும் இணைந்து நடிக்கிறார்கள். இவர்கள் மூன்று பேரும் இணைந்து நடிப்பது இதுதான் முதல்முறை.
இந்தப் படம் பொன்னியின் செல்வன் சரித்திரக் கதையின் தழுவலாக இருக்கும் என்று ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம். எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை வசனம் எழுதுவதாகக் கூறப்பட்டது.பொதுவாக தனது படங்களின் தலைப்பு முதல் டெக்னீஷியன்கள் விவரம் வரை எதையும் வெளியில் சொல்லாமல் ரகசியம் காப்பது மணிரத்னம் பாணி. இந்தப் படத்திலும் அது தொடர்கிறது!இந்தப் படத்துக்கு சன் பிக்சர்ஸ் நிதியுதவி வழங்குவதாகக் கூறப்படுகிறது.

No comments: