வலைபூக்களுக்கு தணிக்கை குழு தேவையா ?

நேற்று எதேச்சையாக மக்கள் தொலைகாட்சி பார்க்க நேர்ந்தது , வலைபூக்கள் பற்றி ஒரு சிறப்பு பார்வை

அதில் மக்களுக்கு உபயோகமாக உள்ள வலைபூக்களை பற்றி கூறும்போது
சுடுதண்ணி வலைப்பூவை திரையில் காண்பித்தார்கள் (வாழ்த்துக்கள் சுடுதண்ணி அவர்களே )"வலைபூக்கள் அதிகமாக வளர்ந்து கொண்டு வரும் இந்த வேலையில் , ஆபாச கருத்துக்கள் , படங்கள் மற்றும் காணொளிகள் , மற்றும் வன்முறையை தூண்ட கூடிய வகையில் இப்பொழுது அதிகமாக வலைபூக்கள் வர ஆரம்பித்து விட்டன , அதனால் வலைபூவிற்கு தணிக்கை அமைக்க வேண்டும் என்று ஒரு சில மக்களும் , அப்படி தணிக்கை குழு அமைத்தால் அது அரசியல் பின்னியில் உள்ளவர்களின் கையில் போய்விடும் , வலை பதிவு வைத்து இருக்கும் ஒவ்வொருவரும் சரியான முறையில் தங்களது கருத்துகளை வெளியிட்டால் அதுவே ஒரு சிறந்த தணிக்கை தான் என்றும் ஒருவர் பேசினார் ".

உண்மையில் இதை பற்றி நாம் யோசிக்க வேண்டியதுதான் ?!
நமக்கு என்று ஒரு தணிக்கை குழு தேவையா ? சிந்தியுங்கள் வலைபதிவர்களே ?

சினிமாவிற்கு என்று இருக்கும் தணிக்கை குழு நம் நாட்டில் இருக்கிறது , அது என்ன செய்கிறது ,
உதாரணம் :கண்டேன் காதலை படத்தில் ஒரு காட்சி
சந்தானம் ஒருவரிடம் மார்க்கட்டில் பேசுவார் , : -
உன்னோட பொண்டாட்டிய வாரத்துக்கு ரெண்டு தடவ அவனோட வீட்டுக்கும் , அவனோட பொண்டாட்டிய உன் வீட்டுக்கும் அனுப்புவீங்கலாம்ல என்று கேட்பார் ,நான் சொல்றத விட நீங்களே அந்த காட்சிய பாருங்க இன்னும் படு கேவலமாக கேட்பார் ,

இதை எப்படி தணிகை குழு அனுமதித்தார்கள் ,

இது போன்று நிறைய காட்சிகள் இருக்கின்றன , தயவு செய்து இதை எல்லாம் அனுமதிக்காதீர்கள் , நகைச்சுவை காட்சிகளை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்கும் போது மிகுந்த வேதனையாக உள்ளது , குழந்தைகள் எவ்வளவு பாதிக்கபடுவார்கள் ? ,

5 comments:

சுடுதண்ணி said...

பகிர்ந்தமைக்கு நன்றி. உங்களின் மூலமே தகவல் குறித்து அறிந்து கொண்டேன், மகிழ்ச்சி :)

BOSS said...

வாங்க சுடுதண்ணி அவர்களே
மிக்க மகிழ்ச்சி

NONO said...

தனிக்கை தேவையற்றது, தமிழ்பதிவு எழுதுவோர் எல்லாம் இந்தியாவில் இருந்து எழுதுவோர் அல்ல...! பல நாடுகள், பல சட்டங்கள்! சினிமாவையும் இனையத்தையும் போட்டுக் குழப்பாதீர்கள், இனையம் எல்லைகள் அற்றது ஒவ்வொரு உண்மையான ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் கருத்து சுகந்திரத்தில் இருந்து தேர்ந்து எடுக்கும் சுகந்திரம் வரையும் வேண்டும். காலத்துக்கு ஏற்றமாதிரி சட்டங்களை மாற்றவேண்டும் ஒழிய பின்நோக்கி செல்லக் கூடாது.

ஜோதிஜி said...

சுடுதண்ணி ஐயா இனி பிரபலமா?

வாழ்த்துகள் தோழா

BOSS said...

வாங்க NANO,ஜோதிஜி அவர்களே

நாட்டில் இருக்கின்ற தணிக்கை குழு ஒழுங்காக வேலை செய்தலே போதும் என்பதற்காக தான் சினிமாவை ஒப்பிட்டு எழுதினேன் நண்பரே , மற்றபடி வலைபூக்களுக்கு தணிக்கை குழு என்பது தேவையற்றது தான்.

புதிதாய் வருகை தரும் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்