இந்தியாவில் 10 சதவீதம் பேருக்கு வேலையில்லை

இந்திய மக்கள் தொகையில் பத்து சதவீதம் பேர் வேலை இல்லாமல் இருப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
வேலை இல்லாத் திண்டாட்டம் குறித்து நாடு தழுவிய முதல் ஆய்வு என்று கருதப்படும் ஆய்வில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை 9.4 சதமாக இருப்பதாக மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் கூறியுள்ளது.

இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வந்தாலும், நாட்டில் நிலவும் உண்மையான வேலையில்லாதோர் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்று பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மேலும் இந்திய மக்கள் தொகையில் 85 சதவீதமானோருக்கு எவ்வித சமூக பாதுகாப்பு நலத் திட்டங்கள் கிடைக்காமல் இருப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

இந்திய அரசு ஊரகப் பகுதிகளில் ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் வேலை தரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்திரவாதத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

courtesy.bbc

No comments: