எனக்கு பிடித்த பாரதியார் கவிதை வரிகள்

by 9:31 AM 2 comments
எழுதுவது என்பது எவ்வளவு கஷ்டமான விஷயம் , எழுதுவதற்கு ஒன்றும் இல்லாததால் தான் பரிட்சையில் தேர்ச்சி பெற முடியாமல் போகிறது , இங்கே எழுதலாம் என்று யோசிக்கும்போது எழுதுவதற்கு நிறைய காரணங்கள் இருந்தும் அதற்கான சரியான எழுத்து கோர்வை வராமல் போவதே இதற்கு காரணம் என்று நினைக்கிறேன் ,மனதில் வெறுமைதான் அதிகமாக மிஞ்சுகிறது ,அதற்காக வெறுமை யை பற்றி எழுத முடியுமா என்ன ? ஆனால் ஆன்மீகவாதிகள் சொல்வார்கள் வெறுமை என்கின்ற நிலைதான் தியானம் , ஆஹா நான் அவ்வளவு பெரிய ஆளா ? என் மனதில் அதிகமாக வெறுமைதான் தோன்றுகிறது , அதற்காக மீசை வைத்தவன் எல்லாம் பாரதி ஆக முடியுமா ?

எனக்கு பிடித்த பாரதியார் கவிதை வரிகள்அறிவே தெய்வம்

கண்ணிகள்

ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்!-பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ?

மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள்!-எத
னூடும்நின் றோங்கும் அறிவென்றே தெய்வமென்
றோதி யறியிரோ?

சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ?-பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ?

வேடம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே-ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே.

நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே-ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்று கொள் வீரென்றந்
நான்மறை கண்டிலதே

நன்றி

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

2 comments:

chinathambi said...

NIce post...
Download Bharathiar Songs MP3
http://chinathambi.blogspot.com

BOSS said...

thanks chinathambi