பின்னூட்டம்

வணக்கம்


நிறைய பதிவர்கள் புலம்புவது உண்டு (என்னையும் சேர்த்து ) , பல நல்ல பதிவுகளுக்கு ஏன் வாசகர்கள் யாரும் பின்னூட்டம் இடுவது இல்லை என்று , ஒரு வேலை பின்னூட்டம் இடுவது என்பது மிக கஷ்டம் என்பதால அல்லது தமிழில் எழுதும் வசதி அந்த இடத்தில இல்லாத தாலா இல்லை வேறு என்ன கரணம் என்று தெரியவில்லை , நான் ஏன் இதை எழுதுகின்றேன் என்றால் நம் அனைவர்க்கும் தெம்பு அளிக்க கூடியது பின்னூட்டம் மட்டும் தான் , ஒரு மனிதன் ஒரு காரியத்தை தொடர்ந்து சிறப்பாக செய்ய சக மனிதனின் ஊக்கத்தை தவிர தவிர வேறு என்ன இருக்க முடியும் ? அதனால் நாம் வாசிக்கும் எல்லா இடுகைகளையும் நாம் அவற்றின் நிறை குறைகளை நம்மால் முடிந்த அளவிற்கு பின்னூட்டமாக போடுவதற்கு முயற்சி செய்வோம் .
இன்று இந்த வலை பூ நான் உருவாகுவதற்கு காரணம் , என் முதகில் தட்டி கொடுத்து என்னை ஊக்கப்படுத்தியவர்கள் தான் , இந்த சமயத்தில் என்னுடைய வலைப்பூவில் வந்து பின்னோட்டம் இட்டவர்களுக்கு நான் நன்றி சொல்ல கடமை பட்டு உள்ளேன் .

நம்மால் முடிந்த வரை சக பதிவர்களை தட்டி கொடுப்போம்

நன்றி

2 comments:

ஜிம்பலக்கடி பம்பா... said...

Good post boss... Will try to put comments..

BOSS said...

thanks jimbalakadi bamba