ஆசிரியர்கள்


ஒரு நாள் எனது உறவினர் தனது குழந்தை படிக்கும் பள்ளியில் கலை நிகழ்ச்சி இருப்பதால் என்னை அழைத்தார் , அதில் அவரது குழைந்தையும் பங்கேற்பதால் நான் சென்றேன் , அங்கு சென்ற எனக்கு அதிர்ச்சி தான் காத்து இருந்தது ஏன் ? அங்கு சின்ன குழந்தைகள் எந்த பாட்டுக்கு ஆடினார்கள் தெரியுமா ?

டாடி மம்மி வீட்டில் இல்ல தடா சொல்ல யாருமில்ல ................

இந்த பாடலுக்கு சின்ன குழந்தைகள் அருவருக்கத்தக்க அசைவுகளோடு கைகோர்த்து ஆடி கொண்டுஇருக்கிரர்கள் , ஏன் இப்படி நடக்கிறது பள்ளிகளில் , ஒழுக்கத்தை சொல்லி கொடுக்க வேண்டிய ஆசிரியர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள். சின்ன வயதில் குழந்தைகள் மனதில் எந்த ஒரு விசயமும் பசுமரத்தில் அடித்த ஆணி போல எளிதில் பதியும் என்பார்கள் , இந்த பிஞ்சு குழந்தைகள் இவ்வாறு செய்ய சொல்லி கொடுக்கும் ஆசிரியர்கள் யோசிப்பார்களா ?

குழந்தைகள் டான்ஸ் கற்று கொள்வதில் எந்த தவறும் இல்லை ஆனால் அவர்கள் எந்த பாட்டுக்கு , எப்படி ஆட வேண்டும் என்று ஒழுங்காக சொல்லி தர வேண்டும் இல்லையா ?

இப்பொழுது பெற்றோர்களின் முக்கியமான கவலை என்னவென்றால் தனது குழந்தை ஒழுக்கமாக வளர வேண்டும் என்பதுதான் , ஆனால் நாமே இவ்வாறு தவறாக வழிவகுத்து விட்டு ,பிற்காலத்தில் நாம் வருந்தி என்னபயன் ? (சினிமா பாட்டுக்கு டான்ஸ் ஆடுனா குழந்தைகள் கேட்டு போயிருமா என்று ? நாம் ஏன் அவ்வாறு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்கிறேன் ) சினிமா பாட்டுதான் ஆட வேண்டும் இல்லை , வேறு எவ்வளவோ நல்ல விஷயங்கள் உள்ள பாடல்கள் இருகின்றன , அவைகளை உபயோகபடுதலமே ! சினிமா பாட்டுக்குத்தான் ஆட வேண்டும் என்றால் நல்ல பாடல் எவ்வளவோ உள்ளது , அதனை உபயோகபடுதலமே ?
மாதா பிதா குரு தெய்வம் , பெற்றோர்களுக்கு பிறகு ஆசிரியர்கள் தான் எல்லாமுமாகவே இருக்க வேண்டும் , ஏன் என்றால் அதிக நேரம் குழந்தைகள் ஆசிரியர்களிடம் தான் இருக்கிறார்கள் , அவர்களை மிகச்சரியான முறையில் கொண்டு செல்வது அவர்களின் கடமையல்லவா !


இன்னொரு சம்பவம் நினைவிற்கு வருகிறது ..
எனது நண்பரின் குழந்தையின் கண்களில் எதோ பிரச்சினை என்று மருத்துவரிடம் அழைத்து சென்று பார்த்து இருகிறார்கள் , கண்ணில் பென்சில் துகள் இருந்துஇருக்கிறது , பிறகு அந்த குழந்தை எல்லா உண்மையும் சொல்கிறது , தனது நண்பன் ஒருவன் பென்சிலால் தனது கண்ணை குத்திவிட்டான் , ஆனால் ஆசிரியர் வெளியே யாரிடமும் சொல்ல வேண்டம் என்று மிரட்டி இருகிறார்கள் ! (இத்தனைக்கும் அந்த பள்ளி நல்ல பெயர் வாங்கின பள்ளி )
நல்ல வேலையாக அந்த குழந்தைக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை , இருந்தும் ஒரு மாதம் ஆனது சரியாக !

குழந்தைகள் என்றால் விளையாட்டு தனமாகதானே இருப்பார்கள் , அவர்களை ஒழுங்காக பார்த்து கொள்வது தானே அவர்களது வேலை .

என்னமோ போங்க சார் , ஏன் இப்டி பண்றாங்கன்னு தெரியல , திரு.அப்துல் கலாம் அவர்கள் இந்த அளவிற்கு வந்ததிற்கு காரணம் ஆசிரியர்கள் தான் என்று அவரே சொலியிருக்கிறார் , ஆசிரியர்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் உள்ள நம் நாட்டில் இது போல தினமும் எவ்வளோவோ விசயங்கள் தவறாக நடப்பது மிகவும் வேதனையான விஷயம் .

பின்குறிப்பு .
நான் எல்லா ஆசிரியர்களையும் தவறானவர்கள் என்று கூறவில்லை , நம் நாட்டில் சிறந்த ஆசிரியர்கள் பலபேர் இருகிறார்கள் , ஆனால் இது போன்ற சில தவறான செய்கையால் மொத்த பேரின் பெயரும் கேட்டு விடுகின்றது , இந்த தவறு சரி செய்யப்பட்டால் ஆசிரியர்கள் இன்னும் போற்றபடுவர்கள் .
நான் யாருடைய மனதயும் புண்படுத்தி இருந்தால் என்னை மன்னிக்கவும்

Post a Comment

2 Comments

உண்மை தான் நண்பரே. இன்று பள்ளி ஆசிரியர்கள் சரியான முறையில் தாங்கள் முன் உதாரணமாக செற்பட்டால் எமது தேசம் நிச்சியம் முன்னுக்கு வரும்
வணக்கம்.

நான் முழுவதும்
ஆமோதிக்கும் இந்த கட்டுரையை என் வலைச்சரத்தில் இணைத்துள்ளேன். நன்றி :)

உங்கள் பதிவு இணைத்த
எனது இடுகை