நாமும் கடவுளாக மாற

நேற்று இரவு சரியாக தூங்கவே இல்லை , ஏன் என்றல் கெத்தாக வலை பூ தொடங்கி ஆயிற்று ஆனால் எந்த விஷயத்தை பற்றி எழுவது என்று ஒரே குழப்பம் , கடைசியாக , என் மனதில் நீண்ட நாட்களாக ஒரு விஷயம் உறுத்திக்கொண்டே இருக்கின்ற விஷயத்தை பற்றி எழுத ஆரம்பித்து விட்டேன் , அது என்னவென்றால் கோவிலில் நம் மக்கள் நடந்து கொள்ளும் முறை ,

பொதுவாக எனக்கு கடவுள் பக்தி என்பது நிறைய உண்டு , அடிகடி கோவில்
செல்வேன் , அங்கு சென்று கோவிலில் கடவுளிடம் மனதை அமைதியாக்கி பிரார்த்தனைகள் செய்து கொண்டு இருக்கும்போது கோவிலில் அமைதி இருக்காது (போன் பேசுவது , ஊர் கதை பேசுவது) , சாமி பார்க்க நீண்ட வரிசையில் நின்று கொண்டு இருந்தால் , குறுக்கே வந்து சேர்வது , பெண்களை கிண்டல் செய்வது , காம பார்வை பார்ப்பது , இப்படி எல்லாம் செய்தால் மக்களுக்கு எவ்வளவு இடைஞ்சல் இருக்கும் ,


முக்கியமாக இன்னொரு விஷயம் , பெண்கள் (அனைவரும் அல்ல ) ஒழுங்காக உடை அணிந்து வருவது கிடையாது , ஆண்கள் மனம் எப்படி ஒழுங்காக இருக்கும் (கட்டுபடுத்துவது வேறுவிஷயம்)


காதலர்கள் கோவிலில் செய்கின்ற கூத்து தாங்க முடியாது , மடியில் படுப்பது , கொஞ்சுவது , இவை எல்லாம் செய்து கோவிலிக்கு களங்கம் ஏற்படுத்தி விடுகிறார்கள் ,


பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நாகரீக உடை அணிந்து கோவிலுக்கு வரும் பழக்கத்தை கொண்டு வருவதால் , அவர்கள் பெரியதாகி அவ்வாறே நடந்து கொள்கிறார்கள் .

அர்ச்சகர்கள் மக்களை கேவலமாக நடத்துவது (அனைவரும் அல்ல ) ,
முதலில் மனிதாபிமானம் , ஒழுக்கம் , நேர்மை , பிறர் மனை நோக்காமை , பொறாமை , இவை அனைத்தும் கோவிலில் நடந்தால் , அங்கு கடவுளிடம் எப்படி பிரார்த்திப்பது , அங்கே நல்ல என்ன அலைகள் இருக்குமா , நல்ல என்ன அலைகள் இல்லத இடத்திற்கு சென்றால் மன அமைதி கிடைக்குமா ?


(முடிந்த அளவு கோவிலில் செல் பேசியை அணைத்து வைப்போம் , இல்லாவிடில் அமைதி மோடில் வைக்க முயற்சி செய்வோம் )


" இது யாரையும் புண் படுத்தவோ , சுட்டி காட்ட வோ எழுதியது அல்ல , இந்த குறைகளை நாம் மனது வைத்து கலைந்தால் கோவிலில் உள்ளே சென்று வெளியே நாம் வரும்போது நாமும் கடவுளாக வருவோம் ."

நன்றி
வாழ்க வளமுடன்

Post a Comment

4 Comments

வேலு said…
மிகவும் சரியானதொரு பதிவு நண்பரே....
calmmen said…
மிகவும் நன்றி நண்பரே
SUMAN said…
சொல்வதில் உண்மை இருக்கிறது... பயமின்றி உரக்கச்சொல்லுங்கள்..

நன்றி
calmmen said…
நன்றி திரு.சுமன் அவர்களே