பெண்கள்



















சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு மைனர் பசங்க எல்லாரும் நீட்டா உடை உடுத்திக்கொண்டு பெண்கள் பின்னால் சுற்ற கிளம்பி விடுவார்கள் , ஒரு தலை காதல் , தற்கொலை , வாழ்கை சீரழிவு , குடும்ப பிரச்சினை , இவை எல்லாவற்றிற்கும் காரணம் ஆண்களாகத்தான் பெரும்பாலும் இருந்தார்கள் , ஆனால் இப்போது அந்த நிலைமை மாறி விட்டது , ஆண்கள் ஒரு அளவிற்கு மாறியிருகிறார்கள் *இது நல்ல மாற்றம்தான் .
பெண்கள் அப்போது சுயமாக சிந்திக்க தெரியாமலும் , கல்வி அறிவு இல்லாமலும், பயம் காரணம் ஆகவும் வீட்டிற்கு உள்ளேயே இருந்தார்கள் , ஆனால் இப்போது நல்ல மாற்றம் .

சுயமாக சிந்திக்கவும் ( சம்பாதிக்கவும் ) ஆரம்பித்து விட்டார்கள் , அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாகிவிட்டது . இது ஒரு வகையான முன்னேற்றம் தான்.
ஆனால் அதிகமாக தவறு செய்ய காரணமாக அமைந்து விடுகின்றது இந்த அதித தைரியம் ,

இரவு நேரங்களில் கேளிக்கை விடுதிகளில் ஆண் துணையோடு சுற்றுவது , ஆணும் பெண்ணும் ஒன்றாக சேர்ந்து வெளியூர் செல்வது , இவை எல்லாம் செய்வதால் பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லாமல் ஆகிவிடுகின்றது.
முன்பு ஆண் எப்படி இருந்தானோ அதை விட அதிகமாக இப்போது பெண்கள் இருக்கின்றார்கள் .,

ஆண்கள் ஒரு அளவிற்கு சம்பாதிக்க வேண்டும் , சமுதாயத்தில் ஒரு அந்தஸ்திற்கு வர வேண்டும் என்ற எண்ணம் ஒரு அளவிற்கு வளர்ந்து இருப்பதால் ஆண்களிடம் ஒரு அளவிற்கு நல்ல மாற்றம் இருக்கின்றது ,

நம்முடைய கலாசாரம் என்னவோ அது போல முடிந்த அளவு இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கிடைக்கும் ,

இதனால் சொல்ல வருவது என்னவென்றால் ஆண்கள் எல்லோரும் அடக்கமான மிக மிக நல்லவர்கள் , (ஆண்களிடமும் நிறைய தவறுகள் இருகின்றன அவை அடுத்த பதிவில் ) பெண்கள் எல்லோரும் மிக மோசம் என்று சொல்லவில்லை !??

பெண்களிடம் அறிவு , திறமை , சிந்திக்கும் ஆற்றல் , கல்வியறிவு , இவை எல்லாம் வளர்ந்து வரும் வேளையில் கொஞ்சம் அடக்கம் , பணிவு , எளிமை , பெரியோர் சொல் கேட்டல் இவை எல்லாம் சேர்ந்து வளர்ந்தால் பெண்கள் இன்னும் போற்றபடுவர்கள் ,

பின்குறிப்பு "
நான் பெண்கள் தாழ்வாகவும் , ஆண்களை உயர்வாகவும் சொல்ல வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த பதிவு எழுதப்படவில்லை ,
பெண்களிடம் உள்ள இந்த குறைகள் களையப்பட்டால் பெண்கள் இன்னும் உயர்வான இடத்திற்கு செல்ல முடியும் என்ற நல்ல எண்ணத்தில் எழுதப்பட்டது .

இதில் உங்களுக்கு மாற்று கருத்து இருந்தால் கூறவும் !

Post a Comment

5 Comments

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்
calmmen said…
அன்பரே நான் முதலில் இணைத்தது உங்கள் ஒட்டு பட்டை தான் அன்பரே

நன்றி
வாய்பிருந்தால் சில நாகரிக பெண்களை பற்றி இந்த வலைபூவில் அறியவும்...
calmmen said…
வருக வருக

நாகரிக பெண்களை பற்றியும் விரைவில் பதிவு வரும் நண்பரே

நன்றி