உலகம் எப்படி அழியும்? அதிர வைக்கும் அறிவியல் உண்மை






உலகம் இறுதியில் எப்படி அழியும்?. இந்தக் கேள்விக்கு பலரும் கூறும் பொதுவான பதில் இயற்கைப் பிரளயத்தில் சிக்கி அழியும், தீயில் அழியும் என்பதுதான். ஆனால் சால் பெர்ல்மட்டர், பிரையன் ஸ்மிட் மற்றும் ஆடம் ரீஸ் ஆகியோர் கூறும் பதில் உலகம் அப்படியே பனிப் பிரதேசமாக உறைந்து போய் விடும் என்பது. இதற்காகத்தான் அவர்களுக்கு 2011ம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு கிடைத்துள்ளது.

இந்த மூன்று அமெரிக்க வி்ஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏன் இந்த மூவருக்குமே கூட தங்களது கண்டுபிடிப்பு பெரும் வியப்பையே அளித்ததாம். அவர்களால் கூட இதை நம்ப முடியவில்லையாம். சூப்பர் நோவா எனப்படும் வெடிக்கும் நட்சத்திரக் கூட்டங்களை தொடர்ச்சியாக ஆராய்ந்து அதன் அடிப்படையில்தான் உலகம் கடைசியில் உறைந்து போய் விடும் என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லியுள்ளனர் இந்த மூவரும்.


14 பில்லியின் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பிங் பாங் எனப்படும் மிகப் பெரிய அண்டவெடிப்பு அனைவருக்கும் தெரிந்ததுதான். பிங் பாங்குக்குப் பின்னர் ஏற்பட்ட மிகப் பெரிய வெப்பம் படிப்படியாக குளிர்ந்து நட்சத்திரக் கூட்டம், கிரகஙக்ள் உள்ளிட்டவை உருவாகின. பிரபஞ்சமும் தொடர்ந்து விரிவடைந்து வந்தது. அந்த செயல் இன்றும் நிற்காமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த வேகம் அதிகரித்தால் இறுதியில் உலகம் முழுவதும் பனிப் பிரதேசமாகி உறைந்து போய் விடும் என்பதுதான் இந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பாகும்.இந்த மூவருமே தனித் தனி அணியாக செயல்பட்டு ஆய்வில் ஈடுபட்டிருந்தவர்கள். ஒரு குழுவுக்கு சால் பெர்ல்மட்டர் தலைமை தாங்கினார். இன்னொரு குழுவுக்கு பிரையன் ஸ்மிட் தலைவராக இருந்தார். பெர்ல்மட்டர் தலைமையிலான குழு தனது ஆய்வை 1998ல் தொடங்கியது. பிரையன் தலைமையிலான குழு தனது ஆய்வை 1994ல் தொடங்கியது. இந்தக் குழுவில் முக்கியப் பங்காற்றியவர் ஆடம் ரீஸ்.

தொலைதூர சூப்பர் நோவாவை இவர்கள் கண்டறிந்து அதை ஆய்வு செய்ய ஆரம்பித்தனர். பூமி மற்றும் விண்வெளியிலிருந்து அதி நவீன தொலை நோக்கிகள் மூலம் இந்த ஆய்வு நடந்தது. இதற்காக அதிக சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர்களும் பயன்படுத்தப்பட்டன. இவர்களது ஆய்வுக்குப் பெரும் வரப்பிரசாதமாக வந்தது டிஜிட்டல் இமேஜிங் சென்சார் கருவி. இதைக் கண்டுபிடித்தவருக்கு 2009ம் ஆண்டுக்கான நோபல் பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.12க்கும் மேற்பட்ட சூப்பர் நோவாக்களை இவர்கள் ஆய்வு செய்தபோதும் லா சூப்பர்நோவா என்ற ஒன்றை மட்டும் குறிப்பாக தீவிரமாக ஆய்வு செய்தனர். இந்த சூப்பர் நோவா, பூமியை விட சிறியது, சூரியனின் எடையை விட அதிகமானது. இந்த ஒரு சூப்பர்நோவா மட்டும் ஒரு முழுமையான கேலக்ஸி வெளிப்படுத்தும் வெளிச்சத்தை விட பல மடங்கு அதிக வெளிச்சத்தை வெளிப்படுத்துவதை இந்த வி்ஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்தது.

இதேபோல மொத்தம் 50 சூப்பர் நோவாக்கள் வரை இவர்கள் கண்டுபிடித்து ஆய்வு மேற்கொண்டனர். ஒரு சூப்பர் நோவாவுக்கே இந்த அளவு வெளிச்சம் வரும்போது 50 சூப்பர் நோவாக்களும் சேர்ந்து எவ்வளவு வெளிச்சம் தர வேண்டும்?. ஆனால் அப்படி தரவில்லை. வி்ஞ்ஞானிகள் குழு எதிர்பார்த்த அளவிலான வெளிச்சத்தை அவர்களால் காண முடியவில்லை. இதன் மூலம் பிரபஞ்சம் வேகமாக விரிவடைந்து வருவதை அவர்கள் கண்டுபிடித்தனர். பிரபஞ்சத்தின் 5 சதவீத பகுதியில்தான் கிரகங்கள், நட்சத்திரங்கள், பூமி உள்ளிட்டவை உள்ளன. மீதமுள்ள 95 சதவீத பகுதி டார்க் எனர்ஜி எனப்படும் அறியப்படாத சக்தி அடங்கியவை. எனவே தற்போது இந்த மூன்று அமெரிக்க விஞ்ஞானிகளும் கண்டுபிடித்துக் கூறியுள்ள தகவல்கள், பிரபஞ்சம் குறித்த ஆய்வுகளுக்கு பெரும் திருப்புமுனையாக அமையும் எனக் கருதப்படுகிறது. மேலும் நம் முன் விரிந்து கிடக்கும், நம்மால் இன்னும் அறியப்படாத பல புதிர்களுக்கு விடை காண இந்த ஆய்வுகள் முதல் படியாக அமையும் எனக் கருதப்படுகிறது.அறிவியலில் எதுவும் சாத்தியமே என்பதை இந்த மூவர் குழு மீண்டும் நிரூபித்துள்ளது.

Post a Comment

2 Comments

ஆச்சர்யமா இருக்கு நண்பா ,.
calmmen said…
innum enna nadakumo theriyala