கடவுள் மேல் கோபம்

by 10:17 AM 2 commentsஎனக்கு அடிக்கடி கடவுள் மேல் கோபம் வருவது உண்டு,கடைசியாக நான் கடவுள் மேல் கோபம் கொண்டது இரண்டு நாட்களுக்கு முன்பு ?

இரண்டு நாள் முன்பு கூட ஒரு தனியார் தொலை காட்சியில் ஒரு சம்பவத்தை பார்த்த போது எனக்கு ரத்தம் கொதித்து விட்டது , நான் என் அம்மாவிடம் கூறினேன் என்னமா சாமி பூதம்னு சொல்றோம் ஒண்ணுகூட நம்ள காப்பாத்த மட்டேன்குதே அப்டீனு புலம்பினேன் , இப்படி எனை புலம்ப வச்ச சம்பவம் என்னன்னா ?

சித்த மருத்துவம் என்ற பெயரில் இதனை வருடங்களாக மக்களை ஏமாற்றி வந்த மருத்துவரையும் , அவரால் பாதிக்கப்பட்ட மக்களையும் தொலைக்காட்சியில் பார்த்தேன் .

ஒரு வயதான பாட்டி ஒருவர் திறந்த வாயை மூட முடியாமல் இருக்கிறார் , நீங்க யோசித்து பாருங்கள் நம்மால் எவ்வளவு நேரம் வாயை திறந்து இருக்க முடியும் ? அந்த பாட்டிக்கு வயது என்பது இருக்கும் , அந்த வயதான காலத்தில் அவர் எவ்வளவு துன்பத்திற்கு ஆளாகி இருக்கிறார் ,, இவர் அந்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்றவர் , அவரிடம் செல்வதற்கு முன்பு நன்றாக இருந்திருக்கிறார் ,

இன்னொருவர் இளைஞர் , இவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் இவர் பெற்றோர் அந்த மருத்துவரிடம் அழைத்து சென்று இருகிறார்கள் , அவரிடம் சிகிச்சை பின்னர் , அந்த பையனால் தரையில் உட்கார முடியாது , அவரின் எல்லா செயல்களுமே நின்றபடியேதான் , சாப்பாடு , காலைகடன் முடிப்பது ,
துன்பம் தாங்க முடியாமல் அந்த பையன் ஒருமுறை தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறான் , அவனது பெற்றோர்கள் மனது எவ்வளவு துன்பப்படும் .

அந்த மருத்துவர் பணத்திற்காக இவ்வளவும் செய்து இருக்கிறார்.அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி இருகிறார்கள் , அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி முன் ஜாமீன் பெற முயற்சி செய்து கொண்டு இருக்கிறார் , அவருக்கு தண்டனை கிடைக்க எத்தனை வருடங்கள் ஆகுமோ தெரியவில்லை, ஏன் கிடைக்காமல் போனாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை ,
நாட்டில் இப்படி பட்ட சூழ்நிலையில் கடவுள் தண்டனை கொடுப்பார் என்றும் சும்மா இருக்க முடியவில்லை , ஏன் என்றால் கடவுள் அடுத்த ஜென்மத்தில் தான் தண்டனை கொடுப்பார் , இல்லை அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்கிறார்கள் ,

துன்பம் வரும்போது காப்பாற்றினால்தான் எவர் மீதும் நம்பிக்கை வரும் ,
இந்த சம்பவத்திற்கு காரணம் நம்முடைய அறியாமை தான் .முடிந்த வரை நாம் எல்லோரும் விழிப்பாக இருக்க முயற்சி செய்வோம் .

நன்றி
வாழ்க வளமுடன்

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

2 comments:

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

Rashika said...

arumai thodarungal