எண்ணம் போல் வாழ்க்கை 2



நம்முடைய செயல்கள் நன்றாக இருக்க வேண்டுமானால் நம் எண்ணங்கள் நல்லதாக இருக்க வேண்டும் , கோவிலுக்கு செல்கிறோம் அங்கே சென்றால் ஏன் அமைதி கிடைக்கிறது அங்கே எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அங்கே இருக்கிறது . கடவுளுக்கு சொல்லபடுகின்ற மந்திரங்களும் நல்ல எண்ணங்களுடயதாக இருப்பதால் அங்கே சென்று வந்தால் மனதுக்கு அமைதி கிடைக்கிறது.
நான் பள்ளியில் படிக்கும்போது என்னுடைய ஆசிரியை ஒருவர் அடிகடி கூறுவர் நீங்கல்லாம் பெரிய ஆல் ஆயிடிங்கனா என்னைய பாத்தா மதிக்காம இடிச்சிட்டு போவிங்க என்று அடிகடி கூறுவர் , அதற்கு நாங்கள் கூறுவோம் நாங்கள் அப்படி எல்லாம் இருக்க மாட்டோம் என்று , ஆனால் இன்று
அவரை பார்க்கும்போது அவர் சொன்னது தான் எனக்கு தோன்றுகிறது , இதை ஏன் சொல்கிறேன் என்றால் அவரது எண்ணம் சரியாக இல்லை , அதே போல் நடந்தது.
எண்ணத்திற்கு ஆயுள் நூற்றி நாற்பது வருடங்கள் என்று சொல்கிறார்கள் , நீங்கள் ஒரு எண்ணத்தை ஆழமாக எண்ணுகிறீர்கள் என்றால் அதை நீங்கள் செய்ய முடியா விட்டால் உங்களை போல் ஒரே கருத்து உடையவர் மூலம் உங்களது எண்ணம் நடைமுறைக்கு வந்து விடும்.

நீங்கள் நல்ல எண்ணங்களை நிறைய மனதில் போட்டு வையுங்கள் அதற்கு நீங்கள் யாருகாவது பணம் கொடுக்க வேண்டுமா என்ன ?
உங்கள் நல்ல எண்ணங்கள் போல் உங்கள் வாழ்கை சிறப்பாக அமையும் , ஏன் உங்களது நண்பர்கள் கூட உங்களது எண்ணங்களின் அலைவரிசையை பொறுத்துதான் அமைவார்கள் .

நீங்கள் திடீரென ஒரு துறையில் இறங்கி பெரிய ஆளாக வரலாம் , நீங்களும் உங்களை சுற்றி உள்ளவர்களும் ஆச்சர்யபடலாம் , நீங்கள் அந்த செயலை செய்வதாக எந்த ஒரு திட்டமோ , அந்த துறையை பற்றி அறிவோ இருந்திருகாது ஆனால் நீங்கள் அந்த வேலையை செய்வதற்கு காரணம் உங்களது முன்னோர்கள் யாராவது செய்ய நினைத்த காரியத்தை நீங்கள் செய்யலாம் (ரொம்ப மொக்க போடுறனோ) , எல்லாவற்றிற்கும் காரணம் எண்ணங்களின் அலைகள் .

முடிந்த உங்களுக்குள் இருக்கின்ற தீய எண்ணங்களை களைந்து விடுங்கள். ஏன் என்றால் நம்முடைய எண்ணம் போலத்தான் நம் வாழ்கை அமையும்.

(ஏதோ எனக்கு தெரிந்ததை எழுதிகிறேன் , தவறு இருந்தால் கண்டிபாக கூறுங்கள் எனது எண்ணங்களையும் எழுத்துகளையும் மேம்படுத்த உதவும்)

நன்றி

வாழ்க வளமுடன்

Post a Comment

0 Comments