எண்ணம் போல் வாழ்கை

by 12:24 PM 5 commentsநம்முடைய பெற்றோர்கள் , பெரியவர்கள் அனைவரும் சொல்லி நாம் கேட்டிருப்போம் " எண்ணம் போல் வாழ்கை " என்று , நானும் இதைப்பற்றி அதிகமாக யோசித்துது உண்டு , நமது எண்ணத்திற்கும் வாழ்கைக்கும் சம்பந்தம் உண்டா என்று !

எந்த ஒரு செயலுக்கும் எண்ணம் தான் விதை அதாவது அடிப்படை , நாம் என்ன நினைகிறோமோ அதுவாகவே ஆவோம் என்கின்றார்கள் பெரியவர்கள் , எண்ணத்திற்கு சக்தி அதிகம் , நாம் ஒரு என்னத்தை தினமும் கொண்டு வந்தால் நாம் அந்த என்னத்தை மிக விரைவில் செயலுக்கும் கொண்டு வந்து விடுவோம் .
நீங்கள் தினமும் காலையில் நான்கு மணிக்கு எழ வேண்டும் என்று என்னத்தை மனதில் நினைத்து கொண்டே வாருங்கள் , மிக விரைவில் நீங்கள் நான்கு மணிக்கு எழுவீர்கள் (இதை படிக்கும்போது சில பேர் நினைக்கலாம் இதெல்லாம் ஒரு விஷயமா என்று , இல்லை இவ்ளோ தானா என்று ) நீங்கள் இங்கு ஆராய்ந்து பாருங்கள் எண்ணம் இங்கு எப்படி வேலை செய்கிறது என்று !
எண்ணத்திற்கு ஆற்றல் உண்டு , நீங்கள் அடிக்கடி கூறியிருக்கலாம் இப்பதான் நான் உன்ன நினச்சேன் நீ உடனே உன் போன் வந்திருச்சு என்று ஆச்சர்யம் அடைவீர்கள் அதற்கு காரணம் உங்கள் எண்ணத்தின் ஆற்றல் அதாவது என்ன அலைகள் அவரை தாக்கியவுடன் அவரே உங்களை அழைத்திருக்கிறார் , இதற்கு டெலிபதி என்று ஒரு பெயர் உண்டு ,நீண்ட தூரத்தில் இல்ல இருவர் எண்ணத்தின் மூலமே தகவலை பரிமாறி கொள்வது , இதுவும் எண்ணத்தின் ஆற்றல் .நீங்கள் தொடர்ந்து கவலை என்னும் நெகடிவான என்னத்தை கொண்டு இருந்தால் உங்கள் வயிற்றில் புண் வரும் , இப்பொழுது உங்களுக்கு புரியுமே எண்ணத்திற்கு எவ்வளவு ஆற்றல் என்று , இவ்வளவு ஆற்றல் உள்ள எண்ணம் ஏன் நமது வாழ்கையை மாற்றி அமைக்கக்கூடாது ?


இந்த பதிவிற்கு வருகின்ற ஆதரவை பொருத்து தொடர்ந்து எழுதலாம் என்று இருக்கிறேன் .
நன்றி
வாழ்க வளமுடன்

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

5 comments:

விஜய் said...

எண்ணம் போல் வாழ்வு - நல்ல இடுகை. உற்சாகத்துடன் நல்ல விசயங்களை எழுதுங்கள். ஆதரவு பெருகும்

நிகழ்காலத்தில்... said...

\\இந்த பதிவிற்கு வருகின்ற ஆதரவை பொருத்து தொடர்ந்து எழுதலாம் என்று இருக்கிறேன் .
நன்றி \\

அருமையான கருத்துக்கள்

தொடர்ந்து எழுதுங்கள்,

kindly remove word verification

ஆதரவைப்பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம்

தோணுவதை எழுதுங்கள்

வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்

உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) said...

அருமையான பதிவு .............

தொடர்ந்து எழுதுங்கள்

வாழ்த்துக்கள்

Anonymous said...

unkal ennampol vaazhga valamudan

BOSS said...

thanks