புவியியல் படிப்பவர்களுக்கு பணி வாய்ப்புகள் காத்திருக்கின்றன

புவியியல் படித்தவர்களுக்கு தற்போது நாடு முழுவதும் பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்ளது. அதாவது, முதலில் புவியியல் துறையில் இருக்கும் பலவிதமான படிப்புகள், அதன்வழியான பணிவாய்ப்புகள் பற்றி தெரிந்தால்தான், மாணவர்கள், இத்துறையில் தங்களுக்கான பிரிவு எது என்பதை முடிவுசெய்து, சிறப்பாக படித்து, நல்ல வேலை வாய்ப்புகளைப் பெற முடியும்,


இந்தியா முழுவதுமுள்ள பல்கலைகளில், புவியியல் படிப்பு பரவலாக வழங்கப்படுகிறது. இளநிலை புவியியல் படிப்பின் பாடத்திட்டமானது, பொதுவாக, பாறையியல், பருவநிலை, கடலியல், மனித புவியியல், வளப் புவியியல், தெற்காசிய புவியியல், Map தயாரித்தல், அளவீடு மற்றும் சர்வே தொழில்நுட்பங்கள், ரிமோட் சென்சிங் மற்றும் புவியியல் தகவல்தொடர்பு அமைப்பு(Geographic Information System - GIS) ஆகியவற்றின் விதிமுறைகளைக் கொண்டுள்ளது. புவியியல் துறையில், BA மற்றும் B.Sc ஹானர்ஸ் படிப்பில், வரலாறு, பொருளாதாரம் மற்றும் கணிதம் உள்ளிட்ட பாடங்கள், பொதுவாக, துணைநிலைப் பாடங்களாக இருக்கின்றன.


புவியியல் துறை பிரிவுகளின் ஏதேனும் ஒன்றில் ஒருவர் சிறப்புத்துவத்தை(specialisation) மேற்கொள்ள, ஒரு மாணவர் முதுநிலைப் படிப்பை மேற்கொள்ள வேண்டும். பல பல்கலைக்கழகங்கள், 2ம் வருடத்தில், ஏதேனும் ஒரு பிரிவில் சிறப்பு படிப்பை மேற்கொள்ள ஒரு மாணவரை அனுமதிக்கின்றன. புவியியல் படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற ஒரு கல்வி நிறுவனத்தில் சேர விரும்பும் ஒரு மாணவர், அவர் விரும்பும் பிரிவு அந்தக் கல்வி நிறுவனத்தில் இருக்கிறதா? என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.


புவியியல் படிப்பில் முதுநிலைப் பட்டம் வைத்துள்ளவர்கள், ஆராய்ச்சி படிப்புகள் உள்ளிட்ட மேல்நிலைப் படிப்புகளுக்கும் செல்லலாம் மற்றும் அதன்மூலம் ஆசிரியர் பணியிலும் ஈடுபடலாம். ஆனால், வேலை வாய்ப்பினை பெற அவர்களுக்கு சிறிது பயிற்சி தேவைப்படும்.  புவியியல் துறையின் பயன்பாடுகள் மற்றும் முக்கியத்துவம் பற்றி இந்தியாவில் இன்னும் சரியாகவும், முழுமையாகவும் அறியப்படவில்லை.


இந்தியா எதிர்நோக்கியிருக்கும் பொது கொள்கை வகுப்பு சவால்கள் மற்றும் சமூகப் பிரச்சினைகளில் புவியியல் பயன்படுத்தப்பட்டால்தான், இதன் முக்கியத்துவம் இந்நாட்டில் கூடும் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.

Post a Comment

0 Comments