கூகுளின் உயர் அதிகாரி டிவிட்டரில்


எந்த ஒரு தகவல்களை தேடுவதாக இருந்தாலும் கூகுளில் தட்டினால் போதும், உடனே தகவல்கள் இருக்கும் இடம் தேடி வந்து குவிகின்றது. ஆயிரக்கணக்கான தகவல்களை கொடுக்கும் கூகுள் நிறுவனத்தின் ஆசியா-பசிஃபிக் ஆப்பரேஷன் மேனேஜிங் டைரக்டரான சைலேஷ் ராவ், டிவிட்டரில் இணைகிறார் என்பது இன்றைய ஹாட் நியூஸ்.
கூகுள் எந்த அளவு புகழ் பெற்ற நிறுவனமோ அந்த அளவு டிவிட்டரும் புகழ் பெற்ற சோஷியல் மீடியா. இரண்டுமே தொழில் நுட்ப உலகில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள். கூகுளின் மேனேஜிங் டைரக்டரான சைலேஷ் ராவ், டிவிட்டரில் இணைவதற்கு கூகுள் நிறுவனம் பெருந்தன்மையாக வாழ்த்து தெரிவித்து இருக்கிறது.
கூகுள் உயர் அதிகாரியாக இருந்த சைலேஷ் ராவின் கடுமையான உழைப்பிற்கு நன்றி சொல்லி இருக்கிறார், இந்தியாவின் கூகுள் செய்தி தொடர்பாளர். 41 வயதான சைலேஷ் ராவ் டிவிட்டரில், சர்வதேச துணைத் தலைவராக பதவி ஏற்கிறார். கடந்த சில வாரங்களாக சென்சார் டிவீட்டுகள் பற்றி காரசாரமான தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது. இதனால் டிவிட்டரில் சில புதிய வசதிகள் உருவாக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
ஏனெனில் டிவீட் செய்யப்படும் கருத்துக்களில் சில விஷயங்கள், மற்ற நாடுகளுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவதாக சில தகவல்கள் வெளி வந்தது. இது போன்ற பிரச்சனைகளை தடு்க்க சென்ஸார் வசதிகளை உருவாக்க போவதாக கூறி இருந்தது டிவிட்டர். புதிதாக டிவிட்டரில் பதவி ஏற்றிருக்கும் சைலேஷ் ராவ் இது போன்ற சவால் நிறைந்த யுக்திகளை சமாளிக்க வேண்டி இருக்கிறது. கூகுளில் வெற்றிகரமாக பணியாற்றிய சைலேஷ் ராவ் டிவிட்டரிலும் பல புதிய சாதனைகளை படைப்பார் என்று நம்பப்படுகிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments: